மாதம் ஒரு ஆர்ப்பாட்டம்.. பொதுக்கூட்டம் நடத்திய திண்டிவனம் ராமமூர்த்தி... முஸ்லீம் லீக் புகழாரம்..!
சென்னை: மாதம் ஒரு முறையாவது ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை வலுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திண்டிவனம் ராமமூர்த்தி மரணமுற்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாக காதர் மொகீதின் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராம மூர்த்தி(84) உடல்நலக்குறை வால் காலமானார். மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.பி. பதவி
மாநிலங்களவை எம்பி, எம்எல்ஏ, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ராமமூர்த்தி. 1967 முதல் 1971 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. 1981 முதல் 1984 வரை தமிழ்நாடு சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் ராமமூர்த்தி. 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்துள்ளார் . சரத்பவரின் தேசியவாத காங்கிரஸின் தமிழக மாநில தலைவராகவும் இருந்துள்ளார்.

கலைப்பு
அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வெளிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

துக்கம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி இன்று காலை மரணமுற்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் துக்கமும் அடைந்தேன். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவராக விளங்கி, மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்தவர்.

முக்கிய பங்கு
காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். எல்லாத் தரப்பு மக்களிடமும் குறிப்பாக சிறுபான்மை சமூக மக்களிடம் மிகுந்த நேசம் மிக்கவராக வாழ்ந்தவர். திண்டிவனம் ராமமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கட்சியை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றியவர்.

பெரும் இழப்பு
தலைவராக இருந்த போது மாதம் ஒரு முறை ஆர்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தி கொண்டு இருப்பார். தமிழக முழுவதும் மாதத்தில் கட்சி சார்பில் ஏதாவது கட்சி நிகழ்ச்சி நடத்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியதில் முக்கிய பங்கு ஆற்றியதில் இவருடைய பணி இருந்தது. இவரது மறைவு ஈடுப்பட செய்ய முடியாது இழப்பாகும்.

இரங்கல் அறிக்கை
அவரின் மறைவு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும், இவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications