சிஏஏ போராட்டங்களை நடத்தியவர்! ஐயூஎம்எல்லின் முதல் பெண் வேட்பாளர்! ஹிஜாப் சர்ச்சைக்கு சைலன்ட் பதிலடி!
சென்னை: சென்னையில் சிஏஏவுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் முதல் பெண் வேட்பாளர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

21 மாநகராட்சிகள்
இந்த தேர்தலில் திமுக 21 மாநகராட்சிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. சென்னையில் 153 வார்டுகளை தன்வசமாகியது. அதிமுக 15 இடங்களை கைப்பற்றியது. திமக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களையும் சிபிஐ பாஜக தலா ஒரு இடத்திலும் வென்றது.

விடுதலைச் சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 2360 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய முஸ்லீம் லீக்
இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் முதல் பெண் வேட்பாளர் பாத்திமா முசாபர் திமுக கூட்டணியில் சென்னை மாநகராட்சியில் 61 ஆவது வார்டில் போட்டியிட்டார். அந்த வார்டில் கிடைத்த 11,443 வாக்குகளில் 6,347 வாக்குகள் பாத்திமா பெற்றுள்ளார். இவர் ஏணி சின்னத்தில் போட்டியிட்டார்.

55 ஆண்டுகள் கழித்து ஏணி சின்னம்
55 ஆண்டுகள் கழித்து இந்திய முஸ்லீம் லீக் கட்சி தனது ஏணி சின்னத்தை பயன்படுத்தி கட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் சென்னையில் போட்டியிட்டு வென்றுள்ளார். பாத்திமாவின் தந்தை அப்துல் சமத் துறைமுகம் பகுதியில் கடந்த 1958 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
Recommended Video

சிஏஏ போராட்டம்
பாத்திமா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை நிறைய போராட்டங்களை நடத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு இது வரலாற்று சாதனை. நாங்கள் ஒரே ஒரு வார்டில் போட்டியிட்டு வென்றோம். தற்போது நடந்து வரும் ஹிஜாப் விவகாரத்திற்கு நான் கொடுத்த அமைதியான பதில் இது! நான் பொதுமக்களுக்கு சேவை செய்வேன். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பாலமாக இருக்க உதவுகிறேன் என்றார் அவர்.
-
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications