சசிகலாவால் எனக்கும் கணவர் உயிருக்கும் ஆபத்து! போயஸ் தோட்ட வீட்டை அபகரிக்க முயற்சி.. ஜெ.தீபா பரபரப்பு
சென்னை: சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லமானது அரசுடமையாக்கப்படும் என அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவும் மகன் ஜெ.தீபக்கும் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவின் வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் தீபா, தீபக் இடையே பிரச்சினை நிலவி வருவதால் தீபாவை தீபக் போயஸ் தோட்ட வீட்டுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் தீபா.
இந்த நிலையில் 77ஆவது சுதந்திர தினத்தின் போது தனது அத்தையின் வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்ற தனது கணவர் மாதவன், மற்றும் ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். அங்கு அவர்களை தீபக் தடுத்து நிறுத்தினார். ஆனாலும் இதையும் மீறி தீபா போயஸ் தோட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டட சுற்றுச்சுவர் அருகே ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் தினந்தோறும் வழிபட்டுவிட்டுதான் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டே வெளியே செல்வார். அது போல் விநாயகர் சதுர்த்தி நிகழ்வெல்லாம் விமரிசையாக நடைபெறும். இந்த கோயிலில் 20 ஆண்டு காலமாக பூஜை செய்து வருகிறார் திநகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்ற குருக்கள். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று போயஸ் தோட்டத்தில் உள்ள கோயிலில் பூஜை செய்ய வந்த ஹரிஹரனுடன் தீபாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
தீபாவும் மாதவனும் தன்னை பூஜை செய்யவிடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தீபா மீது ஹரிகஹரன் புகார் அளித்துள்ளார். மேலும் பிள்ளையாரின்வெள்ளிக் கீரிடத்தையும் பறிக்க முயன்றதாக ஹரிஹரன் தீபா மீது புகார் அளித்தார்.அவர் பூஜை செய்வதற்கான செலவையும் மாத ஊதியத்தையும் சசிகலா கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை ஜெ.தீபா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவின் தூண்டுதலால் குருக்கள் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். ஹரிஹரன் என்னை ஒருமையில் பேசினார். சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். சசிகலாவால் எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என ஜெ.தீபா தெரிவித்தார். மேலும் கொடநாடு கொலை விவகாரத்தில் சசிகலாவின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஜெ.தீபா புகார் அளித்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications