இது வேற இருக்கிற பஞ்சாயத்துல.. "ஜெ.ஜெயலஷ்மி எனும் நான்".. ஜெயலலிதா மகளாம்.. இதுக்கு ஒரு எண்டே இல்லயா
சென்னை: தேனி தொகுதியில் களமிறங்க போகிறாராம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொள்ளும் ஜெயலட்சுமி.. என்ன நடக்க போகுதுன்னு தெரியலயே!!
நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று, பரபரப்பை கிளப்பியவர்களுள் ஜெயலஷ்மியும் ஒருவர்.. கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர்களை சந்தித்தபோது, நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

சோபன்பாபுதான் என்னுடைய அப்பா.. என்னுடைய அம்மா ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2 முறை சந்தித்துள்ளேன். அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை சந்தித்தேன். மைசூரில் ஜெயலட்சுமி என்பவரிடம் எங்கம்மா என்னை கொடுத்துவிட்டார்கள். அவர் என்னை வேறுஒருவரிடம் கொடுத்தனர். அங்கு நான் வளர்ந்தேன்.
டிரஸ்கள்: அவரது டைரி, பயன்படுத்திய டிரஸ்கள் எல்லாமே என்னிடம் உள்ளன. ஜெயலலிதா மகள் என்பதற்கான டிஎன்ஏ மரபணு சோதனைக்கான விவரங்களை கோர்ட்டில் தரப்போகிறேன். அதிமுகவிற்கு போட்டியாக புதிய கட்சியை தொடங்கியிருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிதாக தொடங்கிய தன்னுடைய கட்சியின் பெயரை தற்போது பதிவு செய்துள்ளார் ஜெயலஷ்மி.
ஜெயலஷ்மி: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜெயலஷ்மி சொன்னதாவது: 'நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள். மக்களவைத் தேர்தலையொட்டி புதிதாக "எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்" என்ற கட்சியை தொடங்கியிருக்கிறேன். அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். என்னடைய கட்சிக்கு இரட்டை இலையுடன் கூடிய இரட்டை ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்டிருக்கிறேன்.
இரட்டை இலை சின்னத்தை பெறவும் முயற்சித்து வருகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் என்னுடைய கட்சி சார்பில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளோம். நான் தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன். இரட்டை இலை சின்னத்துக்காகவும், எங்கம்மாவின் சொத்தை திரும்ப வாங்கவும் நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய போகிறேன்" என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார் ஜெயலஷ்மி.
பரிசோதனை: "நான்தான் ஜெ-வின் உண்மையான மகள்" என்று ஏற்கனவே அம்ருதா என்பவர் மீடியா முன்பு வந்து நின்றார்.. டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என்றும், இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு மனு செய்தும், சுப்ரீம்கோர்ட்டிலும் வழக்குத் தாக்கல் செய்தும் பரபரப்பைக் கிளப்பியிருந்தார் அம்ருதா (எ) மஞ்சு.
அதுபோலவே, கிருஷ்ணகிரியை சேர்ந்த ப்ரியா மகாலட்சுமி என்பவர் தன்னை ஜெ. மகள் என்று சொன்னார்.. ஆனால் இவர் பண மோசடி உள்ளிட்ட பல கேஸ்களில் சிக்கி ஜெயிலுக்கு போய்விட்டார்.. இதற்கு நடுவில், ஜெ. இறந்ததுமே, "நான் ஜெ-வின் மகன்'' என ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கோர்ட்டுக்கு போனார்.. ஆனால், போலி ஆவணங்களை தயாரித்த குற்றத்துக்காக கிருஷ்ணமூர்த்தி ஜெயிலுக்கே போய்விட்டார்.
ஜெயலலிதா: ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் சரி, மறைந்த பிறகும் சரி, அவருக்கு குழந்தை இருந்ததா? இல்லையா? என்ற வதந்திகளுக்கு மட்டும் பஞ்சம் இருந்ததேயில்லை.. அதிலும் தேர்தல் சமயங்களில், ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பது போன்ற மலிவான பிரச்சாரங்களும் தமிழக அரசியலில் மலிந்து வருவதும் இயல்பாகிவிட்டது.
எனினும், ஜெயலலிதாவின் மகள் என்பதால் மட்டுமே, இவர்களுக்கெல்லாம் தமிழக அரசியலில் இடம் கிடைத்துவிடுமா? என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற தொடர் வதந்திகளுக்கு நீதிமன்றம்தான் உடனடியாக ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் நேரத்தில் இப்படியான கூத்துக்களையெல்லாம் பார்க்க வேண்டிய நிலைமை தமிழக மக்களுக்கு தொடர் கதையாகிவிடும்..!!
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!












Click it and Unblock the Notifications