சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய தேர்தல் வரலாற்றில்.. முதல்முறையாக தேர்தல் பணியில் சுகாதார பணியாளர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக சுகாதார பணியாளர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 6 கோடிக்கும் மேல் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள்

வாக்குச்சாவடிகள்

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாக்குச் சாவடிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தோற்று உறுதி செய்தவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம்.

குப்பை

குப்பை

இது தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொருத்தவரை 5911 வாக்குச்சாவடிகள் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு 13 கிட் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கான கை கழுவும் திரவம், தேர்தல் அலுவலர்களுக்கான கை கழுவும் திரவம், முகக் கவசம், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி, பொதுமக்களுக்கான கையுறை, தேர்தல் அலுவலர்களுக்கான கையுறை, மருத்துவ கழிவுகள் போட ஏதுவான குப்பை பை, பிபிஇ கிட் என அனைத்தும் இருக்கும்.

2 சுகாதார பணியாளர்கள்

2 சுகாதார பணியாளர்கள்

அது போல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். தமிழகம் முழுவதும் 1,77,874 தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நேரத்தில் கடைசி நேரம் கொரோனா தொற்று உறுதி செய்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கும் நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கும் சுகாதாரத்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

சுகாதாரத் துறை தரப்பில் வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று வாக்குச்சாவடி இயந்திரத்துடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக அவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

English summary
Health Department Secretary J Radhakrishnan says that Sanitary workers are included in election process for the first time in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X