கூட்டு நடவடிக்கை குழுவின் 7 முக்கிய முடிவுகள்! மாநில சட்டசபைகளில் தீர்மானம்.. இதோ முழு லிஸ்ட்!
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
அந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு "கூட்டு நடவடிக்கைக் குழு" அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக 'கூட்டு நடவடிக்கைக் குழு' அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். அதனையடுத்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
7 முக்கிய தீர்மானங்கள்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார். சுமார் 3 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
1. மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும்.
2. 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.

3. மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்.
4. தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, நாடாளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.
5. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, நாடாளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும்.
6. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள்.
7. கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த கூட்டம்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் விருப்பம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அடுத்த கூட்டத்தில் மேலும் சில கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications