வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்! நிதி நிறுவனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு - இனி EMI குறையும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு. அந்த ஒரு கனவிற்காக தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொட்டி, வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கி, மாதா மாதம் தங்களின் ரத்தத்தையும் வியர்வையையும் இஎம்ஐ கட்டி வருகின்றனர்.. அப்படியிருந்தும் சில நிதிநிறுவனங்கள் மக்களை வாட்டி வதைத்து விடுகின்றன. அதற்கெல்லாம் ஒரு கடிவாளம் தற்போது போடப்பட்டுள்ளது.. அது என்ன தெரியுமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் நகர்ப்புற வளர்ச்சி வேகமெடுத்து வரும் நிலையில், வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த எளிய மக்களின் நம்பிக்கையை சில நிதி நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வேதனையளிக்கிறது.

EMI


வீட்டுக்கடன் வட்டி விகிதம்

வங்கிகளின் வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் என்பவை நிலையானவை கிடையாது.. அவை நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைகளுக்கு ஏற்ப மாறக்கூடியவை.

உதாரணத்துக்கு பார்த்தால், கடந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் 8.15 சதவீதமாக இருந்த வீட்டுக்கடன் வட்டி விகிதம், தற்போது 7.90 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு என்பது கடனில் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த ஒரு சிறிய ஆறுதல். ஆனால், இந்த ஆறுதலை மக்களுக்கு சென்றடைய விடாமல் சில தனியார் நிதி நிறுவனங்கள் தடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி

பொதுவாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால், அந்த அடுத்த நிமிடமே கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஏற்றி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமையை ஏற்றும் இந்த நிதி நிறுவனங்கள், வட்டி விகிதம் குறையும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன்? வட்டி உயரும்போது காட்டும் அதே வேகம், அது குறையும்போது மட்டும் ஏன் காணாமல் போகிறது?

பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை ஏற்று வட்டி குறைப்பை உடனடியாக அமல்படுத்தி விட்டன. ஆனால், பல வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், இந்த நிதி ஆண்டு முடியும் வரை அதிக வட்டியிலேயே லாபம் பார்க்கலாம் என்று கணக்குப் போட்டு, வட்டி குறைப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன.. இதுதான் அந்த விஷயம்..


தேசிய வீட்டு வசதி வங்கி

சாமானிய மக்களின் பாக்கெட்டில் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பிடுங்கும் இந்த செயலுக்கு எதிராக தற்போது புகார்கள் குவிய துவங்கிவிட்டன.. இதனை தொடர்ந்து, NHB என்று சொல்லக்கூடிய தேசிய வீட்டுவசதி வங்கி மிகவும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

"பொதுத்துறை வங்கிகள் போன்று, வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் வட்டி விகிதங்களை, அந்தந்த சமயத்தில் குறைக்க வேண்டும். இதை செய்யாமல், வேண்டுமென்றே கூடுதல் வட்டியை வசூலிப்பது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக வட்டி குறைப்பை அமல்படுத்த வேண்டும். வீட்டுக்கடன் வாங்கிய மக்களின் சுமையை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையை, முடக்கும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களின் சுமை குறையுமா

அதாவது, மக்களின் கடன் சுமையைக் குறைக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் செயல்படும் எந்த ஒரு நிறுவனமும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் மதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதனால்தான், வட்டி குறைப்பின் பலன் சாமானியர்களை சென்றடைவதை உறுதி செய்யத் தேசிய வீட்டுவசதி வங்கி தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது... பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+