லீக்கான ஜாக்குலின் பெர்னாண்டஸ் "முத்த" போட்டோ! சுகேஷ் சந்திராவின் அந்தரங்க அடாவடி.. நடந்தது என்ன?
சென்னை: இந்தியா முழுக்க மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மோசடி, முறைகேடு வழக்குகள் உள்ளன. சிறையில் இருக்கும் போது 2 பிஸ்னஸ்மேன்களிடம் பெயில் வாங்கி தருவதாக கூறி இவர் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில்தான் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் இவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
ஏற்கனவே சுகேஷுக்கு எதிராக நாடு முழுக்க 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. டிடிவி தினகரனுக்கு இரட்டை இல்லை சின்னம் பெற்று தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கிலும் இவர் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் சென்னையில் இவர் சொகுசு பங்களாவில் ரெய்டு நடத்தப்பட்டு பல சொகுசு கார்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் இவரின் வீட்டில் இருந்து பென்ஸ், ஃபெராரி, லேண்ட் க்ரூஸர், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட மொத்தம் 16 கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மோசம்
பெரிய அரசியல் தலைவர்களின் மகன் என்று கூறி பல்வேறு மோசடிகளை செய்து ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீது புகார் உள்ளது. பல மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பெரிய பிஸ்னஸ் மேன்களை குறி வைத்து, அவர்களை ஏமாற்றி இருக்கிறார். முக்கியமாக தான்தான் அழகிரி மகன் துறை தயாநிதி என்று கூறி சென்னையில் சுகேஷ் சந்திரா போலீசாரிடம் கூட ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இப்படி பல கேஸ்கள் இவர் மீது இருக்கும் நிலையில்தான் இரண்டு பிஸ்னஸ் மேன்களை இவர் ஜெயிலில் இருந்தபடியே ஏமாற்றியது அம்பலம் ஆகியது.

சுகேஷ் சந்திரசேகர்
போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஷிவிந்தர் சிங் மற்றும் ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குனர் மால்விந்தர் சிங் ஆகியோருக்கு பெயில் வாங்குவதாக கூறி இவர் ஏமாற்றி உள்ளார். திகார் சிறையில் ஷிவிந்தர் சிங் மற்றும் ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குனர் மால்விந்தர் சிங் இருவரையும் சந்தித்த சுகேஷ் அவர்களுக்கு பெயில் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி உள்ளார். வெளியே இருக்கும் என்னுடைய ஆட்களுக்கு பணம் கொடுத்தால் உனக்கு பெயில் கிடைக்கும் என்று கூறி உள்ளார். பின்னர் சிறையில் இருந்தபடியே ஐபோன் மூலம் மத்திய அமைச்சர்கள் பேசுவது போல பேசி இரண்டு பேரின் மனைவிகளிடம் பணம் கறந்துள்ளார்.

ஏமாற்றினார்
முதலில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் பிஏ பேசுவது போலவும், பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவது போலவும் பேசி ஏமாற்றி இருக்கிறார். அதாவது நாங்கள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம், சுகேஷ் ஆட்களிடம் காசு கொடுங்கள்.. உங்களுக்கு பெயில் கிடைக்கும் என்பது போல் சிறையில் இருந்தபடியே ஐ போனில் குரலை மாற்றி பேசி ஏமாற்றி உள்ளார். இதில்தான் சுகேஷ் 200 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
சுகேஷ் சந்திரசேகரின் இந்த முறைகேடு வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் புகார் உள்ளது. சுகேஷ் ஏமாற்றிய பணத்தில் சில கோடிகளை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வழங்கியதாக போலீஸ் சந்தேகிக்கிறது. இந்த நிலையில்தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் இவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சமீபத்தில் இவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல் அமலாக்கத்துறை சம்மனும் அனுப்பியது. சுகேஷ் சந்திரா ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பல கோடி மதிப்புள்ள கார்கள், ஆபரணங்களை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சொகுசு பொருட்கள்
Gucci, Hermes, Louis Vuitton மற்றும் Mini Cooper போன்ற சொகுசு நிறுவனங்களின் ஆபரணங்களை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் வாங்கி கொடுத்து ஏமாற்றி இருக்கிறார். தான் சிறையில் இருந்து ஏமாற்றிய சில கோடிகளை சுகேஷ் சந்திரா ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு கொடுத்து இருக்கிறார். இதற்கான வங்கி பரிவர்த்தனை விவரங்களும் உள்ளன. அவருக்கு சில கார்களை வாங்கி கொடுத்துள்ளார். அதேபோல் உனக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு வாங்கி கொடுக்கிறேன் என்றும் கூறி உள்ளார். அதோடு ஹாலிவுட் நிறுவனம் ஒன்றின் பொய்யான அழைப்பு கடிதத்தையும் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

பாலியல்
பாலியல் தேவைகளுக்காக ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சுகேஷிடம் இருந்த பணத்தை பார்த்து ஒருவேளை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏமாந்து இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. அல்லது கூட்டு மோசடியாகவும் இருக்கலாம். பல பாலிவுட் நடிகைகளுக்கு சுகேஷ் இதேபோல் பரிசுகளை வாங்கி கொடுத்து தூண்டில் போட்டுள்ளார். ஆனால் பாலிவுட் நடிகைகள் பலர் இவரின் வலையில் விழவில்லை. வேறு சிலர் விழுந்து இருக்கலாம்.. விசாரிக்க விசாரிக்கத்தான் உண்மை தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்தரங்கம்
இந்த நிலையில்தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் இருக்கும் அந்தரங்க புகைப்படம் இணையத்தில் கசிந்து உள்ளது. இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மூக்கில் சுகேஷ் முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதனால் இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு அதிக தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சுகேஷ் சந்திரா வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத்துறை மீண்டும் விசாரிக்க உள்ள நிலையில் இந்த புகைப்படம் லீக்காகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications