Jacto Geo: ஆசிரியர்களுடன் முதல்வர் பேச மாட்டார்.. முடியாது.. அரசு காரசார பதில்!
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று காரசார விவாதங்கள் வைக்கப்பட்டது. இந்த போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து இருக்கிறது.

கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடக்கிறது. ஜாக்டோ ஜியோ ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறார்கள். இன்று நடந்த விசாரணையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.
அதில், தமிழக முதல்வர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை ஹைகோர்ட்டில் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது.
தமிழக முதல்வர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை செய்ய மாட்டார். ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும். போராட்டம் முடியும் நிலையில் உள்ளது.
பணியாளர்கள் யாருடனும் முதல்வர் பேச்சு நடத்த மாட்டார் . 10 ஆயிரம் பணிக்கு மூன்று லட்சம் பணியாளர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதனால் போராடும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது, என்று அரசு கூறியுள்ளது.
இதையடுத்து நீதிபதி கிருபாகரன் இந்த விவகாரத்தில் தற்போது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும். 90% சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தின் கோரிக்கையை ஆசிரியர்கள் ஏற்றது மகிழ்ச்சி. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண்பதே நீதிமன்றத்தின் நோக்கம், என்று கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications