Jacto Geo: இன்று இரவே அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை!
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீது இன்று இரவு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீது இன்று இரவு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழக அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இதில் முடிவெடுத்து இருக்கிறது.
ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்கிய அரசு, இன்று இரவு அளிக்கப்படும் அவகாசம்தான் இறுதி அவகாசம் என்று கூறியுள்ளனர்.

என்ன போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மீண்டும் மீண்டும்
இந்த நிலையில் ஆசிரியர்கள் மீண்டும் பணியில் திரும்புவதற்கான நேரத்தை மாற்றி உள்ளது அரசு. இன்று இரவு 7 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இன்று காலை 9 மணிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டு பின் அது மதியம் மாற்றப்பட்டு, தற்போது அது இரவிற்கு தள்ளிவைக்கப்ட்டு இருக்கிறது.

ஆனால் என்ன
அதே சமயம் நாளை பணிக்கு திரும்பினால் சிறப்பு அனுமதி வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. நாளை முதல் பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதியை பெற வேண்டும். முதன்மை கல்வி அலுவலரால் பணியாணை வழங்கப்படும் இடத்தில் ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும்.

இன்று இரவு
பணிக்கு வராத ஆசிரியர்களின் பெயர்களை இன்று இரவு சேகரிப்போம் என்று அரசு கூறியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மைகல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

கடுமையான நடவடிக்கை
பணிக்கு வராதா ஆசிரியர்கள் மீது 17பி விதிப்படி குற்றக்குறிப்பினை நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இன்று இரவு அனைவரின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications