ஜெய் பீம் பார்த்துவிட்டு.. சந்துருவை அணுகிய சென்னை ஐஐடி மாணவி! வழக்கில் நடந்த திருப்பம்! செம பின்னணி
,,
சென்னை: சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி சந்துரு கொடுத்த சட்ட ஆலோசனை வழக்கில் முக்கிய மாற்றத்தை கொடுத்துள்ளது.
சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி தரப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் அந்த மாணவி 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பிஎச்டி படித்து வந்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்த மாணவியை சக ஆராய்ச்சி மாணவர்கள் சிலரும், பேராசியர்களும் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இவர் புகார் அளித்த நிலையில் அந்த வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சென்னை ஐஐடி
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அதில் இரண்டு பேராசியர்களும் அடக்கம். பேராசிரியர்கள் ஜி.எடமன் பிரசாத், ரமேஷ் எல். கர்தாஸ் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஐஐடி இயக்குனர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையருக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐஐடி இயக்குனர்
இதில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலும் 1 வருடமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அந்த மாணவியை தலித் எல்லாம் இங்கே படிக்க வந்தால் இப்படித்தான் என்று திட்டி, அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வளாகத்திலும் ஆய்வுக் கூடத்திலும் வைத்து இரண்டு முறை மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த மாணவி 3 முறை தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார்.

வழக்கு
இந்த வழக்கில் கடந்த 1 வருடமாக பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தற்போது திடீரென வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.. அதற்கு காரணமாக இருந்தவர் முன்னாள் நீதிபதி சந்துரு!
சமீபத்தில் இவரின் வழக்கு ஒன்றை அடிப்படையாக வைத்து நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டது. கடலூரில் பட்டியலினத்தவர் ஒருவர் பொய் கேசில் கைது செய்யப்பட்டு, போலீசார் அவரை அடித்து கொன்ற வழக்கை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராஜாக்கண்ணுவிற்கு என்ன நடக்கிறது.. என்ற ஒற்றை புள்ளிதான் படத்தின் கதை.

ஜெய் பீம்
இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் அதிகார அழுத்தம், இன்னல்கள், போலீஸ் டார்ச்சர், சட்ட போராட்டம், உரிமைக்கான குரல் என்று பல விஷயங்களை ஜெய் பீம் அதிரடியாக பேசியது. நீதிபதி சந்துரு வக்கீலாக இருந்த போது வாதாடிய வழக்கு ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஐஐடியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த மாணவியும் ஜெய் பீம் படம் பார்த்து நம்பிக்கை பெற்று இருக்கிறார்.

ஜெய் பீம் படம் பார்த்து நம்பிக்கை
அந்த படத்தை பார்த்த மாணவியின் நண்பர்கள்.. அது நீதிபதி சந்துரு பற்றிய கதை என்று கண்டுபிடித்துள்ளனர். அதோடு அந்த மாணவியை சந்துருவை நேரில் சென்று சந்திக்கும்படி கூறி உள்ளனர். இதையடுத்து வழக்கில் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் உடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த அந்த மாணவி... வேறு வழியின்றி முன்னாள் நீதிபதி சந்துருவை சந்தித்து இருக்கிறார். அதுவரை அந்த மாணவியின் புகார்களை யாரும் செவி மடுத்து கேட்கவில்லை.

சந்துரு பேட்டி
ஆனால் சந்துரு மட்டும்.. அந்த மாணவியின் புகார்களை செவி மடுத்து.. மிகவும் பொறுமையாக கேட்டு இருக்கிறார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள சந்துரு, அந்த மாணவியின் நண்பர்கள்தான் என்னிடம் அவரை அழைத்து வந்தனர். ஜெய் பீம் படம் பார்த்த பின் அவர்கள் என்னிடம் நம்பிக்கையுடன் வந்துள்ளனர். என்னிடம் அந்த மாணவி பேசும்போதே பல முறை உடைந்து அழுதார். அவரின் வழக்கில் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தாலும் வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

பெண்கள் சங்க
இதையடுத்து அந்த மாணவியை உடனே அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தை (All India Democratic Women's Association -AIDWA) அணுகும்படி கூறினேன். அதோடு இந்த வழக்கு தொடர்பாக சிலரிடம் பேசினேன். இந்த வழக்கில் பெண்கள் சங்கம் தலையிட்ட பின் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மீண்டும் புதிதாக பதிவு செய்யப்பட்டது. வழக்கில் எஸ்/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் சேர்க்கப்பட்டது.

வன்கொடுமை தடுப்பு சட்டம்
வழக்கில் சேர்க்கப்படாமல் இருந்த முக்கிய பிஎச்டி கைடு பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டது. இப்போது வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தேங்கி கிடந்த வழக்கு தற்போது தீவிர விசாரணைக்கு சென்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தியும் பெரிய அளவில் வழக்கில் முன்னேற்றம் இல்லை. தற்போது 3 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கில் கைது நடவடிக்கைகள் காலதாமதம் ஆகி வருகிறது.

சிபிசிஐடி
போலீஸ் மீதே கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. வழக்கு திக்கு தெரியாமல்.. முன்னேற்றம் அடையாமல் இருந்த நிலையில்தான் முன்னாள் நீதிபதி வழக்கின் போக்கையே மாற்றி இருக்கிறார்.. வழக்குகளின் தன்மையை புரிந்துகொள்ள அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்களும், பேருரைகளும்தான் எனக்கு பேருதவியாக இருந்தது என்று கூறியவர் முன்னாள் நீதிபதி சந்துரு. தற்போது அதே அண்ணல் வழியில் அந்த மாணவிக்கு சந்துரு உதவி இருப்பது பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வழக்கு முடியும் வரை சொந்த மண்ணை மிதிக்க மாட்டேன் என்று அந்த மாணவியும் சென்னையில் நம்பிக்கையுடன் தங்கி இருக்கிறார்.
Credit: DTNEXT
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications