Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய் ஸ்ரீராம் To ஜெகன்நாதர்! அயோத்தி பூகம்பம் To ஒடிசா புயல்? “மோடி3.O”’ புதிய ஸ்கிரிப்ட் ரெடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய மோடி, ஜெய்ஸ்ரீராம் சொல்வதற்குப் பதிலாக ஜெகன்நாதரை வணங்கிவிட்டுப் பேசினார். இது பாஜகவின் புதிய ஆட்சிக்கான மாற்றமாகத் தெரிகிறது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள சக்தி வாய்ந்த மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மோடியை வெல்வதற்காக 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டது.

lok sabha election 2024 uttar pradesh maharashtra west bengal

அத்தனை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி பாஜக மீண்டு மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது. இதன் மூலம் மோடி, தனது 3.O என்ற புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உள்ளார்.

அதிகப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும், அந்தக் கட்சி தனிப்பெரும் கட்சியாகத் தன்னை இப்போது தக்கவைத்துள்ளது. அதற்குக் காரணம், அந்தக் கட்சிக்குத் தொண்டர்களைத் தாண்டி சில இந்து மிஷினரி தன்னார்வலர்களின் பலமும் இருக்கிறது.

அதை முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது பேட்டியில் ஏற்றுக் கொண்டுள்ளார். பாஜக சில மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் வேர்விட்டு வளர்ந்துள்ள மிகப்பெரிய கட்சி.

இன்னும் சொல்லப் போனால் 140 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் விடப் பெரிய கட்சி அதுதான்.

பாஜகவைத் தோற்கடிக்க நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, மிகவும் தனித்துவமான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், வெறும் பிரச்சார யுக்தியால் மோடி காங்கிரஸ் வியூகங்களைத் தரைமட்டமாக்கியுள்ளார்.

அவரது பேச்சுகள் சில சர்ச்சையானவை. வகுப்புவாதத்தைத் தூண்டும் விதத்தில் வெளிப்பட்டவை. இன்னும் சொல்லப் போனால், தேச ஒற்றுமையை முன்வைத்து இயங்கிவந்த பாஜக, ஒடிசா தேர்தல் களத்தில் பிரிவினைவாதம் பேசியது.

lok sabha election 2024 uttar pradesh maharashtra west bengal

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் அண்டை மாநிலத்து மக்களைப் பிளவு படுத்தும் நோக்கில் கருத்துகளை உதிர்த்தனர். ஆனால், அந்த மாநிலத்தில் அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கும், நவீன் பட்நாயக்கின் 24 வருட ஆட்சிக்கு முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய அளவுக்கும் வளர்ந்துள்ளது.
பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி 'ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி' என மோடி கூறியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் அவர் ஜெய்ஸ்ரீராமுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லி இருக்க வேண்டும். அல்லது அயோத்தி ராம் லல்லாவுக்கு கிடைத்த வெற்றி எனச் சொல்லி இருக்க வேண்டும்.

ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லை. மாறாக ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெகன்நாதருக்கு சமர்ப்பித்துள்ளார்.

அயோத்தியை மையம் கொண்டிருந்த பூகம்பம் இப்போது ஒடிசா மாநிலத்தில் புயலாக வீசத் தொடங்கி இருக்கிறது. அந்த மாற்றத்தைத்தான் மோடியின் பேச்சு உணர்த்துகின்றது.

பாஜக 214இல் தனிப்பெரும்பான்மையைப் பெற்றது. 2019 அதைவிட அதிக பெரும்பான்மை பெற்றது. இப்போதும் கூட அக்கட்சி வீழ்ந்துவிடவில்லை. மாறாக தனிப்பெரும் கட்சியாகத் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இந்தளவுக்கு உறுதியாக இருப்பது அபூர்வம்.

இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், மூன்றாவது முறை படு குழியில் போய் விழுந்தார். அந்தளவுக்கு இல்லை, இப்போது மோடியின் நிலைமை. ஆனால், அவரது தைரியத்தை இந்தத் தேர்தல் முடிவு அசைத்துப் பார்த்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

புதியதாக ஆட்சி அமைப்பது குறித்துப் பேசிய மோடி, "இந்த மூன்றாவது ஆட்சியில், நாடு பெரிய முடிவுகளின் புதிய அத்தியாயங்களை எழுதும். இது மோடியின் கியாரண்டி" என்று கூறி இருக்கிறார்.

மேலும் "எங்கள் வெற்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வெற்றி" என்றும் அவர் சொன்னார். இதில் ஒரு சூசகமான செய்தி ஒளிந்துள்ளது.

மோடி மீண்டும் பிரதமராக வந்தால், 'இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்து' என இந்தியா கூட்டணிக் கட்சிகள் முழங்கி வந்தன. ஆகவேதான் மோடி இதை ஜனநாயகத்தின் வெற்றி என்று சொல்லி இருக்கிறார்.

lok sabha election 2024 uttar pradesh maharashtra west bengal

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசிய பிரதமர், ஒடிசா மாநிலத்தின் ஆளும் தெய்வமான ஜெகன்நாதரை வணங்கிவிட்டு தனது உரையைத் தொடங்கினார்.

அதற்குக் காரணம், உபியில் உள்ள ராமர் பாஜகவை இந்த முறை காப்பாற்றவில்லை. அதற்கு மாறாக ஒடிசா ஜெகன்நாதர் காப்பாற்றியுள்ளார். அங்கே பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
மேலும் 21 மக்களவையில் 19 இல் வெற்றி பெற்றுள்ளது.தேசிய அளவில் பாஜக 240 இடங்களை வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால் 293 இடங்களை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க , 273 என்ற மேஜிக் நம்பர் தேவை.

அதைப் பெற மோடி, தெலுங்கு தேசத்தையும் ஐக்கிய ஜனதா தளத்தையும் நாடியுள்ளார்.

இந்திய அரசியல் வரலாற்றில் 1962க்குப் பிறகு முதல்முறையாக ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்று முறை அரியணையில் அமர உள்ளது."அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வாக்காளர்கள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள உடைக்க முடியாத நம்பிக்கை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.

நாம் முன்னேற வேண்டுமானால் ஊழலைக் கடுமையாகத் தாக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமானது" என்றார் மோடி.

ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குக் கிடைத்துள்ள "தார்மீக தோல்வி" என்று எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர்.

இதற்கு எதிரான வாதம் ஒன்று முன்வைக்கப்படுகிறது. பாஜக தனித்து வெற்றி பெற்ற அளவுக்கு எதிரணியினர் ஒன்றிணைந்து போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறிவருகின்றனர் பாஜகவினர்.

பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதன் பலம் குறைந்து விடவில்லை. சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெரிய அளவு அக்கட்சி முன்னேறியுள்ளது.

மேலும் மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் செல்வாக்கைத் தக்கவைத்துள்ளது. சத்தீஸ்கர், டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய நிலங்களில் பாஜக சக்தியைக் காட்டி உள்ளது.

பாஜக, "சப்கா சாத், சப்கா விகாஸ்' என்று சொன்னாலும் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்களின் நலன் விரும்பிதான் என்பதை இந்தத் தேர்தல் களம் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அதை மாற்ற ஒரு புதிய நரேட்டிவை பாஜக செட் செய்ய வேண்டும். அதன் தொடக்கமாகத்தான் மோடி, 'இது ஜனநாயகத்தின் வெற்றி' என்று மாற்றிக் கூறியுள்ளார்.

மாபெரும் வெற்றியாக இருந்திருந்தால் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லி இருப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+