“ஆக்ஷன்”.. செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் பணி தொடங்கியது! மருத்துவமனையில் சிறைத்துறை ஆபிசர்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் சிறைத் துறை அதிகாரி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். ஜூன் 28 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு இடைக்கால ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்தி வைத்து உள்ளார். தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வந்தாலும், நாளை தீர்ப்பு வெளியாகும் வரை அவர் நீதிமன்ற காவலில் உள்ள கைதியாகவே கருதப்படுகிறார். எனவே அவர் சிறைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையால் குவிக்கப்பட்டு இருந்த துணை ராணுவப் படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு சிறைத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் அப்பகுதி வந்து இருக்கிறது. இந்த நிலையில் மாலை புழல் சிறை அதிகாரி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
நாளை நீதிபதி வெளியிட இருக்கும் தீர்ப்பில் அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தால் சிறைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வருவார். அதுவரை சிறைத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உள்ளேயே செந்தில் பாலாஜி இருப்பார் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல் நிலை தொடர்பாக இன்று காலை ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
அதில், அதில், "மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
-
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications