ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் இதனை தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பலரும் பேசினர்.

சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கம் பேசும்போது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காணும் வகையில் அங்கு நிரந்தமாக மாடங்கள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
திமுகவினால் கொடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டை மீட்பதற்காக ஏராளமானோர் போராடினார்கள். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான பதிலுரையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
விரும்பத்தகாத நிகழ்வுகளான காவல்துறையினரை தாக்கிய வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று கூறினார். அதேபோல் வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications