Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கலாச்சாரத்தில் கை வைக்க முடியாது".. ஜல்லிக்கட்டு தீர்ப்பில் கோர்ட் சொன்ன முக்கிய விஷயம்.. மேஜர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசு வென்றுள்ளது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடந்த வழக்கில் தமிழ்நாடு வென்றுள்ளது.

தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான சட்டத்துக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்டவை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.

Jallikattu Verdict: Culture heritage can not be part of judiciary says Supreme Court to PETA in the case

ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து இருந்தன . உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

தீர்ப்பு சொல்வது என்ன? ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநில அரசு ஒன்று இது கலாச்சாரம் என்று சட்டம் இயற்றி உள்ளது.

நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டமன்றத்தின் முடிவை, அதன் பார்வையை நாங்கள் எதிர்க்க மாட்டோம், மேலும் இது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். தொன்மையான ஒரு கலாச்சாரம் இது என்று சட்டமன்றம் அவசர சட்டத்தில் முடிவு செய்துள்ளது. அவர்களின் சட்டத்தில் இது தமிழ்நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிகட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் என மாநில அரசு கருதினால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது.

அப்படியே தலையிடுவதாக இருந்தாலும் இதில் சட்டசபை முடிவு எடுத்த நிலையில் அதில் நாங்கள் தலையிட முடியாது, என்று ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் ஜல்லிகட்டு நடத்துவதத்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வாதம்: இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், காளைகளுக்கு வலி, வேதனை இல்லை. இருக்கிறது என்றே வைத்துக்கொள்ளுவோம். மற்ற விலங்குகளை வைத்து போட்டிகள் நடப்பது இல்லையா? பல விலங்குகளை வைத்து வேலைகளை செய்கிறார்களே? அது தவறு இல்லையா?

ஜல்லிக்கட்டு என்பது கேளிக்கை கிடையாது. இதில் காளைகளின் வீரத்தை காட்டுகிறார்கள். காளைகள் ஏன் முக்கியம் என்பதை காட்டுகிறது. குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்துகிறார்களே? அதில் என்ன தவறு இருக்கிறது. குதிரைகளை பயன்படுத்துவதை இவர்கள் ஏன் எதிர்ப்பது இல்லை? காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது கண்களில் மிளகாய் பொடி தூவுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். காளைகள் இவர்களின் குடும்பத்தில் பிள்ளைகள் போல. பெற்ற பிள்ளைகளை யாரவது இப்படி நடத்துவார்களா?

இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகள் உயிர் வாழ்கின்றன. அந்த காளைகளுக்கு நோய்கள் வரலாம்.

Jallikattu Verdict: Culture heritage can not be part of judiciary says Supreme Court to PETA in the case

ஆனால் ஜல்லிக்கட்டு காரணமாக காளைகளை இவர்கள் சிறப்பாக பாதுகாக்கிறார்கள். இல்லையென்றால் வெளிநாட்டு காளைகள் அந்த இடத்தை பிடித்துவிடும். ஜல்லிக்கட்டுதான் நாட்டு காளைகளை பாதுகாக்கிறது. சர்க்கஸ் போல ஜல்லிக்கட்டு ஒன்றும் கேளிக்கை கிடையாது, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+