என்னாது "We Stand With Vijay"யா? நாசமா போவீங்க! இன்ஃப்ளூயன்சர்களை வறுத்தெடுத்த ஜேம்ஸ் வசந்தன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் 41 பேரை பலிக் கொடுத்த குடும்பத்தினரின் அழுகுரலை கேட்டதுமே நெஞ்சம் பதைபதைக்கும் நிலையில் "We Stand with Vijay" என சில இன்ஃப்ளூயன்சர்கள் திட்டமிட்டு பரப்பி வருவதை கண்டித்து ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது: நேற்று வரை நம்மோடு பேசித் திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுதிணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர்.

karur vijay

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள். கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி. இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக் கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்க முடியாத விரக்தியில் அமர்ந்திருக்க - "WE STAND WITH VIJAY" என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புகிறீர்களே, வீணாய்ப் போனவர்களே! உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்? எது நடந்தால் உனக்கு இழப்பின் அருமை புரியும்?

விபத்து

ஒரு விபத்தின் அடிப்படை உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கா உன் அறிவு மழுங்கியிருக்கிறது? ஒரு நடிகனை ரசிப்பது உன் மனசாட்சியைக் கொல்லும் அளவிற்கா கொண்டு போய் விடும்?

40 பேர் உயிரிழப்பு

அவன் நடித்து புகழும், பணமும் ஈட்டியதைவிட உனக்காக என்ன செய்துவிட்டான்? எதற்காக 40 உயிர்களின் இழப்பைக் கூட கொச்சைபடுத்தும் அளவிற்கு தரம்தாழ்ந்து போனாய்?

ஏளனம்

தமிழ்நாட்டை வியந்து பார்க்கும் பிற மாநிலங்களும், பிற நாடுகளும், நம்மை ஏளனமாய் பார்க்கவைத்து விட்டீர்களே! மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது!

பேய்கள் உங்களைத் துரத்தும்!

உங்கள் வாழ்வு சிறக்காது!

அவைகளின் சாபம் உங்களை விரட்டிப் பிடிக்கும்! கொடுமையின் உச்சத்தை நீ அனுபவிக்கும் முன் திருந்திவிடு என ஆவேசத்துடன் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.டீம்

கரூரில் நடந்த கொடூரத்திற்கு திமுக அரசுதான் காரணம் என இன்ஃப்ளூயன்சர்கள் பரப்பி வருகிறார்கள். இவர்கள் We Stand with Vijay , We Will rise again in Tamilnadu என்ற கூறி வருகிறார்கள். இந்த நபர்கள் தமிழக அரசு விளக்கம், டிஜிபி விளக்கம் உள்ளிட்டவைகளில் இருந்து சற்றும் பொருந்தாத கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் விஜய் தாமதமாக வந்ததும் மக்களை ஏங்க வைத்ததும் தவறு என்பதை அவர்கள் சுட்டிக் காட்டவே இல்லை.

இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்கள்

இதற்காகவே நிறைய இன்ஃப்ளூயன்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "41 அப்பாவி உயிர்கள் பலியான நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்காமல் தவெகவினர் அரசியல் செய்வது தவறு" என நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

விஜய்க்கு ஆதரவு

அது போல் வட இந்தியாவிலும் விஜய்க்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. இவர்கள் என்ன நடந்தது என்றே தெரியாமல் விஜய்க்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விஜய்யை பார்க்க ஏன் போனீர்கள் என்றெல்லாம் நியாயமே இல்லாத கேள்வியை கேட்கிறார்கள். விஜய்யை பார்க்க போகாமல் இருந்திருந்தால் உயிர் போயிருக்காது சரிதான். ஆனால் ஒரு அரசியல் கூட்டத்திற்கு வரும் சினிமா ஹீரோவை பார்க்க மக்கள் விரும்பி வந்துள்ளவர்களை எப்படி அது போல் கேட்க முடியும். இவர் மக்களோடு மக்களாக பழகாதவர். இத்துடன் நம்மூரூக்கு எப்போ வருவாரோ என்ற எண்ணத்தில் அவர்கள் போய் பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+