Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜன் தன் வங்கி கணக்கு முடக்கமா? வங்கிகளுக்கு பறந்த மக்கள்! மத்திய அரசு சொல்றதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: "செப்டம்பர் 30க்குள் KYC சேர்க்கப்படாவிட்டால் ஜன் தன் வங்கி கணக்குகள் (Jan Dhan Accounts) முடக்கப்படும்" என்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது ஒரு தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டு, KYC அப்டேட் அவசியம் என்றாலும், சேர்க்காவிட்டால் கணக்கு முடக்கப்படாது என அரசு உறுதியளித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்ட பரபரப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜன் தன் வங்கி கணக்கு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இந்த ஜன் தன் வங்கி கணக்கு என்பது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆகும். இந்த வங்கி கணக்கில் இதர சேமிப்பு கணக்குகளைப் போன்று பெரிய அளவில் பண பரிமாற்றம் செய்ய முடியாது.

jan-dhan-accounts-will-not-be-blocked-for-missing-kyc-by-september-30-clarifies-indian-government

KYC அப்டேட் செய்யாவிட்டால்

எனினும், இந்த வங்கி கணக்குகள் வாயிலாகவே மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் உள்ளிட்டவை இந்த வங்கி கணக்கு மூலமே அளிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. அதாவது, ஜன் தன் வங்கி கணக்குகளில் KYC எனப்படும் Know Your Customer என்ற விவரத்தை அப்டேட் செய்யாவிட்டால் 'ஜன் தன்' வங்கி கணக்கு செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் இயங்காது என்ற தகவல் பரவியது.

இது குறித்த தகவல் கிடைத்ததும், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலரும் வங்கிகளுக்கு படையெடுக்கத் தொடங்கினர். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததால், அதன் பின் பரிவர்த்தனை செய்ய முடியாது என்ற அச்சத்தில் வாடிக்கையாளர்கள் பலரும் வங்கிகளுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.

மத்திய அரசு விளக்கம்

இந்த நிலையில் தான், இது குறித்த மத்திய அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜன் தன் வங்கி கணக்குடன் KYC விவரங்களை அப்டேட் செய்யாவிட்டால் அக்கவுண்ட் முடக்கப்படும்" என்ற தகவலில் உண்மையில்லை. KYC விவரங்களை சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம் என்றாலும் கூட, அதை சேர்க்காவிட்டாலும் கணக்கு முடக்கப்படாது.

வழக்கம் போல வங்கி கணக்கு விவரங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்" என்றனர். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது மத்திய அரசு கொண்டு வந்த தனது குடிமக்களுக்கு உதவியளிக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். கடந்த 2014ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத குடிமக்களை வங்கி கணக்கு தொடங்க வைப்பதே இதன் நோக்கம்.

ரூ.2 லட்சம் கோடி

இந்த வங்கி கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூபே டெபிட் கார்டு இந்த அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும். விபத்து காப்பீடு ரூ.1 லட்சம் ரூபே கார்டுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது. 2018-க்கு பிறகு கணக்கு தொடங்கியிருந்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு ஆகும்.

ரூ.10,000 வரை Overdraft எடுத்துக்கொள்ள முடியும். இந்த வங்கி கணக்கு மூலம், கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். 'ஜன் தன்' திட்டத்தின் கீழ் சுமார் 56 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் சுமார் ரூ.2 லட்சம் கோடி பணம் இருப்பு உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+