சென்னையில் தடம் புரண்ட ஜன் சதாப்தி! நல்ல வேளை அது மட்டும் நடக்கல.. பெரு மூச்சுவிட்ட பொதுமக்கள்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுகொண்டிருந்த ஜன் சதாப்தி விரைவு ரயில் திடீரென தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 280க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து ரயில் பயணம், பாதுகாப்பு அம்சங்கள், ஆட்கள் பற்றாக்குறை, நிதி தேவை போன்றவை குறித்து பெரும் விவாதங்கள் மேலெழுந்தன.

ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் போடப்பட்டு ரயில்கள், தண்டவாளங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்துவிட்டதன் மூலம் ரயில்வே துறைக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு ஏற்படும் ஒவ்வொரு விபத்தையும் அரசும், பொதுமக்களும் கவனமாக உற்றுநோக்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை தற்போது மற்றொரு விபத்து நடந்துள்ளது. அதாவது, சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு வந்த ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகளை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு, அங்கிருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுள்ளது.
இப்படி செல்லும் போது திடீரென ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது பெட்டிகள் மீண்டும் சரி செய்யப்பட்டு ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. பொதுவாக பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில்தான் இயக்கப்படும்.
குறைந்த வேகத்தில் இயக்கிய ரயில் எப்படி தடம்புரண்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications