ஜனநாயகனுக்கு சென்சார் சான்று உண்டா? நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு ‛சென்சார்' சான்று வழங்ககோரிய வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி பி.டீ. ஆஷா வழங்குகிறார். இதனால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்குள் நுழைந்து உள்ளதால் இது அவரது கடைசி படமாகும். இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசியல் சார்ந்த வசனங்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பொங்கலையொட்டி இந்த திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் படத்துக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை.
இதையடுத்து திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி பி.டீ.ஆஷா விசாரித்தார்.
பட தயாரிப்பு நிர்வாணம் சார்பில், ‛‛பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். நாங்களும் திருத்தங்கள் செய்தோம். ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக அளித்த புகாரில் சென்சார் சான்று வழங்கப்படவில்லை.
படம் இன்னும் வெளியாகாத நிலையில் ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ளது. யாரோஅளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள். சென்சார் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து சென்சார் வாரியம் சார்பில், ‛‛குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது. , படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.
சென்சார் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களை கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும். தணிக்கை குழு பார்த்த பிறகு மறுதணிக்கைக்கு உத்தவிட சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதுபற்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது'' என்று வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் தான் நாளை காலை 10.30 மணிக்கு ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது. இதனால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சென்சார் சான்று கிடைக்காதாதல் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்சார் சான்று பிரச்சனை காரணமாக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்சன்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக படத்தை ஒத்திவைத்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications