Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.500 கோடி முதலீடு.. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்காமல் இழுத்தடிக்கிறாங்க.. படக்குழு வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் வழக்கில், படத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்துள்ளது. வழக்கமாக ஒரு வாரத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும் என்று கூறிய தயாரிப்பு நிறுவனம், டிசம்பர் 18ஆம் தேதியே தட்கல் முறையில் விண்ணப்பித்தும், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. ஆனால் படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இதனால் சென்சார் சான்றிதழ் அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நாடி இருக்கிறது.

Jana Nayagan Censor

இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் தரப்பில், திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகராரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்போ அல்லது நிராகரிக்கப்படுவதற்கு முன்போ மனுதாரர் நீதிமன்றத்திற்கு வர முடியாது. படம் மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்து ஜனவரி 5ஆம் தேதியே தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவித்துவிட்டது என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து ஜனநாயகன் படக்குழு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

அதில், ரூ.500 கோடி ஜனநாயகன் படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் என உரக்கக் கூறிவிட்டோம். ரிலீஸ் தேதியை அறிவித்ததால், தட்கல் முறையில் டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கை சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளோம். வழக்கமாக படம் பார்த்த 5 நாட்களுக்குள் சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுவிடும்.

ஆனால் டிசம்பர் 18ஆம் தேதியே தட்கல் முறையில் விண்ணப்பித்தும், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறது. தணிக்கை அதிகாரிகள் சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார்கள். தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை "புகார்" என்று கூட அழைக்க முடியாது. இன்றே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதற்கு மத்திய அரசு தரப்பில், ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு உத்தரவிட முடியும். தணிக்கை வாரியத்தின் டைம்லைனை பின்பற்றித்தான் ஆக வேண்டும் நீதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+