‘ஜனநாயகன்' பொங்கலுக்கு வெளியாகுமா இல்லையா? முடிவு உச்ச நீதிமன்றம் கையில்! ரேஸில் குதித்த 4 படங்கள்!
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் முடிவு தான் 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜனநாயகன் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதும், அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு புது படங்கள் போட்டி போட்டு வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. மற்றொரு படமான பராசக்தி இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

ஜனநாயகன்
விஜய்யின் 'ஜனநாயகன்' பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தணிக்கை வாரியம், படத்தின் தணிக்கைச் சான்று வழங்காத நிலையில், திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. ஜனநாயகன் பொங்கல் ரேஸில் இல்லை என்று ஆனபிறகு அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளன.
'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்ன்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி. ஆஷா நேற்று தீர்ப்பளித்தார். அதில், தணிக்கை வாரியம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
சென்சார் விவகாரம்
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் தலைமையிலான அமர்வு, தயாரிப்பு நிறுவனத்திடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது. "தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்தது ஏன்? நீங்களாக ஒரு தேதியை முடிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது." என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
தணிக்கை வாரியம் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்காமல் தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி தவறு என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பொங்கல் ரிலீஸ் ஆக வாய்ப்பு?
இந்தத் தடையின் காரணமாக, 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் ரிலீஸ் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தயாரிப்பு நிறுவனம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரியும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மனுவை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமையே விசாரிக்க வேண்டும் என்றும் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த மனு இதுவரை எண்ணிடப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் முடிவுதான் 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜனநாயகன் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதும், அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளன.
வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. தணிக்கை சான்றிதழ் கிடைத்த கையோடு பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளது இப்படம்.
திரௌபதி 2
ஜனநாயகன் விலகலுக்கு பின்னர் பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மற்றொரு திரைப்படம் திரெளபதி 2. இப்படத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
தலைவர் தம்பி தலைமையில்
பொங்கல் ரேஸில் குதித்துள்ள மற்றொரு திரைப்படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள இப்படம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. தற்போது ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸிலிருந்து விலகி உள்ளதால் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தை ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு கொண்டு வர முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
தெறி ரீ-ரிலீஸ்
ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனதால் சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவர் நடித்த 'தெறி' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் நடித்து அட்லி இயக்கிய தெறி படத்தை வரும் ஜனவரி 14 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
மேலும், சந்தானம் நடிப்பில் தயாராகி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த திரைப்படம் தான் சர்வர் சுந்தரம். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிப்போய் கிடக்கிறது. கடந்த ஆண்டு மதகஜராஜா திரைப்படம் 12 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் சர்வர் சுந்தரம் இணைந்துள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் இப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications