ஜனநாயகன் தீர்ப்பு வந்த மறு நொடி! நேராக தலைமை நீதிபதியிடம் போன மத்திய அரசு வழக்கறிஞர்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பட ரிலீஸ் ஆவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஜனநாயகன் விவகாரத்தில் இன்று நீதிமன்றத்தில் என்ன நடந்தது.. தனி நீதிபதி தீர்ப்பு முதல் மேல்முறையீடு வரை அங்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்காமல்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகனுக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்தது. அரசியலில் நுழைந்துள்ள விஜய், இந்தப் படத்தோடு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக விஜய் அறிவித்திருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருந்தது.

Jana Nayagan Vijay

மேல்முறையீடு

முதலில் இந்தப் படம் முதலில் இன்று ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனால் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் இன்றைய தினம் ஜனநாயகன் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதனால் படம் ரிலீஸாகும் என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அது சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது. அதற்குள் இன்னொரு முட்டுக்கட்டை வந்துவிட்டது. ஜனநாயகன் படத்திற்குச் சான்று வழங்கும் தனி உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.

என்ன நடந்தது

அதாவது முதலில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா தனிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும், மறு தனிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் அவர் ரத்து செய்தார். நீதிபதி ஆஷா தனது தீர்ப்பை வாசித்த மறுநிமிடமே சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் ஜெனரல் சுந்தரேசன் அங்கிருந்து நேரடியாகத் தலைமை நீதிபதி அறைக்குச் சென்றார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்குமாறு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக் கொண்டு தலைமை நீதிபதியும் அதற்கு அனுமதி வழங்கினார்.

வாதம்

ஜனநாயகன் படத்திற்குச் சான்றிதழ் வழங்கத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த மேல்முறையீட்டைத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக படத்தை வெளியிட்டு விடக் கூடாத என்ற வாதத்தை முன்வைக்கப்பட்டது. அதற்குத் தலை நீதிபதி, மேல்முறையீடு செய்யத் தான் அனுமதி வழங்குவதாகவும் அதே நேரத்தில் விசாரணை எப்போது என்பதைத் தான் முடிவு செய்து கூறுகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டார். இதனால் விசாரணை எப்போது என்பதில் இதுவரை தெளிவு இல்லை.

அடுத்து என்ன

மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறாரா.. இல்லை வேறு அமர்வுக்கு மேல்முறையீடு அனுப்பப்படுமா என்பதில் தெளிவு இல்லை. விசாரணை எப்போது என்பதை நான் சொல்கிறேன் எனத் தலைமை நீதிபதி கூறிய நிலையில், மேல்முறையீட்டு மனு நாளை அல்லது திங்கள்கிழமை விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும், தலைமை நீதிபதியை அதில் முடிவெடுப்பார் என்பதால் அது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. ஜனநாயகன் ரிலீஸுக்கு இன்னுமே சிக்கல் நிலவுவதால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+