Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன் வழக்கு வாபஸ்.. பின்வாங்கிய படக்குழு! ஹைகோர்ட்டில் கடிதம்.. அடுத்து என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சட்டப்போராட்டம் நடத்திய வந்த படக்குழு, அதில் வெற்றி கிடைக்காததால், சென்சார் போர்டிடம் மறு தணிக்கை செய்ய கோரி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பட நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன்ம் கடிதம் வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Jana Nayagan Team Decides to Withdraw Case Seeking Censor Certificate Letter Sent to High Court

ஜனநாயகன் படம் சென்சார் வழக்கு

அரசியலில் எண்ட்ரி கொடுத்து இருப்பதால் ஜனநாயகன் தான் எனது கடைசி படம் என்று விஜய் அறிவித்து இருந்தார். இதனால், இந்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் படம் வெளியாகவில்லை. இதனால் படக்குழு உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அந்த உத்தரவை ரத்து செய்தது. சென்சார் போர்டு பதிலளிக்க உரிய அவகாசம் வழங்கவில்லை எனக்கூறி வழக்கை மீண்டும் தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற வழக்குகளால் படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பது தாமதம் ஆகிக்கொண்டே சென்றது.

வழக்கை வாபஸ் பெற முடிவு

இதனால், சட்டப்போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு சென்சார் போர்டிடமே மீண்டும் மறுதணிக்கை கோரலாம் என்ற முடிவு ஜனநாயகன் படக்குழு வந்தது. இதையடுத்து, ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படம் அனுப்பபட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை வாபஸ் பெற ஜனநாயகன் படக்குழு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணன் கடிதம் அளித்துள்ளார். வழக்கை வாபஸ் பெறுவதற்கான தலைப்பில் இந்த விவகாரம் பட்டியலிடப்பட வாய்ப்பு உள்ளது.

20 நாட்களுக்குள் சான்றிதழ்?

அடுத்தடுத்த பிரச்சினையால் ஜனநாயகன் படம் வெளியாகாமல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜனநாயகன் படம் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லாமல், தணிக்கை வாரியம் மூலம் மறு தணிக்கைக்கு அனுப்பலாம் என்று படத் தயாரிப்பு நிறுவனம்முடிவு செய்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறு தணிக்கைக்கு விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் சான்றிதழ் தொடர்பான முடிவு தெரிந்து விடும் என்பதால், படத்தை பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அடுத்து என்ன நடக்கும்?

கடிதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வாபஸ் பெறுவது தொடர்பான வழக்கு நாளை முதல் வழக்காக உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதி பிடி ஆஷா இந்த வழக்கை விசாரிக்கிறார்.. அப்போது படக்குழுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+