இன்னும் ஒரே மணி நேரம்.. ஜனநாயகனால் பராசக்திக்கு வந்த திடீர் குழப்பம்! திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்
சென்னை: இந்தாண்டு பொங்கலுக்கு எந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்பதில் கடைசி வரை குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே பராசக்தி நாளை ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு எவ்வளவு ஸ்க்ரீன் கிடைக்கும்.. ஜனநாயகன் மேல்முறையீடு காரணமாக பராசக்திக்கு ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ் சினிமாவில் பொங்கல் ரிலீஸில் இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டு பெரிய குழப்பம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. பொங்கல் ரீலீஸுக்கான தேதியே வந்துவிட்ட போதிலும் கூட இன்னும் இதில் எந்தவொரு தெளிவும் இல்லாத ஒரு சூழலே இருந்து வருகிறது.

பொங்கல் ரேஸ்
முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படமே பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் ஜனநாயகன் படம் முதலில் கடந்தாண்டு அக்டோபர் மாத ரிலீஸுக்கே திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், படம் ரெடியாக தாமதமானதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ரிலீஸாவதால் தியேட்டர்கள் எப்படி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதில் கேள்வி எழுந்தது. இருப்பினும், விஜய்க்கு அதிகத் தியேட்டர்களும் சிவகார்த்திகேயன் படத்திற்குச் சற்றே குறைவான தியேட்டர் கிடைக்கும் எனச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் கடைசி நேரத்தில் ஜனநாயகன் ரிலீஸாவதில் சிக்கல் உருவானது.
ஜனநாயகன்
அந்த படம் இன்று ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் சென்சார் சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டாலும் கூட சென்சார் போர்ட் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் பட ரீலீஸ் ஆவதில் சிக்கல் தொடர்கிறது.
பராசக்தி
மறுபுறம் பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் குழப்பம் இருந்தது. படம் நாளை ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், இன்று வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் குழப்பம் இருந்தது. தமிழகத்தில் ஓரிரு தியேட்டர்களில் மட்டுமே புக்கிங் ஓபன் ஆகியிருந்த நிலையில், பிற மாநிலங்களில் புக்கிங் ஓபன் ஆகாமல் இருந்தது. இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பதில் குழப்பம் இருந்தது. இந்தச் சூழலில் இன்று படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாளை பராசக்தி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.
திருப்பூர் சுப்பிரமணியம்
ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா என்பதில் குழப்பம் இருக்கும் நிலையில், எந்த படத்திற்கு எவ்வளவு ஸ்கிரீன்கள் கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கிறது. இது தொடர்பாகப் புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "முதலில் பராசக்தி படத்திற்கு 40% திரையரங்குகளும், ஜனநாயகனுக்கு 60% திரையரங்கும் நாங்கள் ஒதுக்கி இருந்தோம்.
இன்று காலை தனி நீதிபதி படத்திற்கு சென்சார் சான்றிதழ் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருந்தார். அதற்கு எதிராக அப்பீல் செய்துள்ளனர். 2.15 அல்லது 2.30 மணி அளவுக்கு மேல்முறையீடு குறித்து என்னவென்று பார்த்துச் சொல்வதாக நீதிபதி சொல்லி இருந்தார். எனவே, நீதிபதி என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்தே திரையரங்கு ஒதுக்கீடு இருக்கும்" என்றார்.
என்ன நடக்கும்!
அதாவது முதலில் ஜனநாயகன்- பராசக்தி படங்களுக்கு 60-40 என்று தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இப்போது சிவகார்த்திகேயன் படம் மட்டுமே ரிலீஸ் ஆவதால் அதிகபட்சத் தியேட்டர்களில் பராசக்தி வெளியாகும். பிற்பகலில் தான் ஜனநாயகன் மேல்முறையீடு மனு குறித்துத் தெளிவு கிடைக்கும் என்பதால் அப்போது தான் எவ்வளவு தியேட்டர் என்பது இறுதியாகும். சிக்கல் தீர்ந்து ஓரிரு நாட்களில் ஜனநாயகன் ரிலீஸானால்.. பராசக்தி தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, ஜனநாயகனுக்கு அதிகத் தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க!












Click it and Unblock the Notifications