ஜெ. வளர்ச்சியை விரும்பாத ஜானகி! திருநாவுக்கரசர் உடைத்த உண்மைகள்!
சென்னை: பொங்கல் பண்டிகை வரும் காலங்களில் கூடவே எம்.ஜி.ஆரின் நினைவுகளும் வரும். அதற்குக் காரணம் ஜனவரி 17 அவருடைய பிறந்தநாள்.
இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவருடன் இருந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் திருநாவுக்கரசர். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா அரசியல் வளர்ச்சியில் முக்கிய புள்ளியாக இருந்தவர்.

அவர், எம்.ஜி. ஆரின் கடைசிக் காலகட்டத்தில் நடந்த பல சம்பங்கள் பற்றிய நினைவுகளை அசைபோட்டுள்ளார். அதில் ஜெயலலிதாவின் வளர்ச்சியை ஜானகி விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அன்று என்ன நடந்தது? எம்.ஜி.ஆர். யாரை ஆதரித்தார்? திருநாவுக்கரசு என்ன சொல்கிறார்?
"எம்.ஜி.ஆர்தான் என்னை அரசியலில் வளர்த்தார். பதவி கொடுத்தார். அமைச்சராக்கினார். அவரால் அரசியலுக்கு வந்தவன் நான். அவரது விசுவாசி. அவரது நினைவுநாளில் தொடர்ந்து அவரது சமாதிக்குப் போய் மரியாதை செலுத்து வருகிறேன்.

என் மகளுக்கு அவரது தாயார் சந்தியாவின் பெயரைத்தான் வைத்திருக்கிறேன். மகனுக்கு ராமச்சந்திரன் என்று பெயர் வைத்திருக்கிறேன். என் குடும்பமே அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.
நான் எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடும்போது 27 வயசுதான். கல்யாணம்கூட ஆலவில்லை. 1977இல் போட்டியிட்டேன். அந்த வயதில் என்னைத் தேர்தலில் நிறுத்தி, என்னைத் துணைச் சபாநாயகராகவும் பதவியில் அமர்த்தினார். 76 வக்கீலுக்குப் படிச்சேன். 77இல் எம்.எல்.ஏ. ஆகிவிட்டேன்.
ஒருவருடம்தான் நான் வக்கீலாக இருந்தேன். நான் துணை சபாநாயகராக இருந்தபோது மு.கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவர். சபாநாயகர் இல்லாத நாளில் நான் அவையைத் தலைமையேற்று நடத்த வேண்டும். மு.கருணாநிதி அனுபவம் உள்ள தலைவர். அவரை சமாளித்து அவையை நடத்த முடியுமா எனப் பயந்தேன்.

அதை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். அவர், 'நீ வக்கீல் படித்து இருக்கே. பயப்படாத, சமாளித்துக் கொள்ளலாம்' என்று என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.
நல்ல உடல்நிலை ஆரோக்கியத்துடன் தான் இருந்தார். அவர் தினமும் உடற்பயிற்சி செய்யக் கூடியவர். ஆகவே உடம்பை கவனமாகப் பார்த்துக்கொண்டவர். 1984இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை பலரையும் போல அனைத்து உணவையும் சாப்பிடுவார். இறுதிக்காலத்தில் ஐஸ் க்ரீம் கூட சாப்பிட்டார். பெரிய கட்டுப்பாடு இல்லை. அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.
ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து மதுரைக்கு எம்.ஜி.ஆருடன் காரில் போய்க் கொண்டிருந்தேன். தஞ்சாவூரில் ஒரு அரசு விழா. அடுத்த நாள் மதுரையில் ஒரு அரசு விழா. அது என் துறை சார்ந்த விழா.
நான்தான் அந்தத்துறைக்கு அமைச்சர். ஆகவே, தஞ்சாவூர் முடிந்ததும் நேராக மதுரை போய்விடலாம் என்று விரும்பி தலைவரிடம் சொன்னேன். அவர், தொப்பியைக் கழற்றி தலையைத் தடவிக்கொண்டே சொன்னார். 'நான் என்ன உன் வயசு ஆள் என்று நினைக்கிறாரா? திருச்சியில் தங்கிவிட்டு காலையில் செல்வோம்' என்றார்.
அப்போது அவர் உடல்நலம் இல்லாமல் இருந்தார் என்று சொல்லவில்லை. சோர்வாக இருந்தார். அந்த வயதில் அவரை என் அளவுக்கு நான் இழுக்கக் கூடாது அல்லவா?

அதன்பின்னர் சில காலம் கழித்து அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அமெரிக்கா சென்றார். அதற்கு முன்னதாகவே கூட்டங்களைக் குறைக்க ஆரம்பித்தார். எதிர்க்கட்சித் தலைவர் போடும் கூட்டங்களுக்கு மக்கள் அதிகம் வந்தனர்.
ஆகவே, கூட்டத்திற்கு நான் அவரை தேதி கேட்பேன். அவர் ஜெயலலிதாவை வைத்து கூட்டம் போடு எனச் சொன்னார். 1982இல் ஜெயலலிதாவை ஊக்குவிக்க ஆரம்பித்தார். அவருக்கு அடுத்து ஜெயலலிதா சென்றால்தான் கூட்டம் வரும். ஆகவே அவரை அவர் அனுப்பி வைத்தார்.
அறந்தாங்கியில் அப்போதுதான் மு.கருணாநிதி ஒரு கூட்டம் பேசி இருந்தார். பெரிய கூட்டம். அதை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். அவர் சொன்னதால் ஜெயலலிதாவை வைத்து பெரிய பொதுக்கூட்டம் போட்டேன். அதுதான் ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் பெரிய பொதுக்கூட்டம்.
ஜெயலலிதாவை முன்னிறுத்தியது ஜானகி அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் அதை மௌனமாக எதிர்த்தார். ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு அனைவரும் அறிந்ததுதான்.

அதைவைத்து ஜானகி அவர் கட்சிக்குள் தலையெடுப்பதை விரும்பவில்லை. அவர் மனதிற்குள் என்ன இருந்தது எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அவரே முதல்வராக வந்தார்.
அன்றைய நிலையில் ஆர்.எம்.வீரப்பன்தான் முதல்வராக வரவேண்டும். அவருக்குத்தான் அந்த வாய்ப்பு இருந்தது. நெடுஞ்செழியன் தான் மூத்தவர். ஆனால் வீரப்பனுக்குத்தான் அதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. பல மந்திரிகள் ஜானகி அம்மாவுடன் தான் இருந்தார்கள்.
எங்கள் பக்கம் இருந்த 20 பேர்களும் ஜானகிதான் முதல்வர் என்று முடிவானதும் அங்கே சென்றுவிட்டார்கள். கடைசியாக மிச்சமாக 30 பேருக்கு மேல் இருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் ஆர்.எம்.வி மற்றும் ஜானகி அம்மா அணியில்தான் இருந்தார்கள்.
என்னிடமே ஜானகி அம்மா ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்துவதைப் பற்றி கேட்டார். 'தலைவர் உடல்நிலைக்காகத் தமிழக மக்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்திராகாந்தி அம்மாவும் மறைந்துவிட்டார். இந்த நேரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தால்தான் கட்சி ஜெயிக்குமா? எதற்கு இந்த தேவையில்லாத வேலை' என்று ஜானகி என்னிடம் தொலைப்பேசியில் கோபித்துக் கொண்டார்.

நான் அவரிடம், 'நீங்கள் சி.எம் சம்சாரமாக இருக்க விரும்புகிறீர்களா? தலைவர் சம்சாரமாக இருக்க விரும்புகிறீர்களா? ஜெயலலிதா பிரச்சாரத்திற்குச் சென்றால்தான் தலைவர் சி.எம். ஆக முடியும்' என்று சொன்னேன்.
அமெரிக்காவிலிருந்து தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டுக்கு வந்ததும் அவர் முதலில் பார்த்தது ஆளுநரை, அடுத்துப் பார்த்தது என்னைத்தான். ஆனால், இடையிலிருந்தவர்கள் நான் அணி அமைத்து கட்சியை உடைக்கப் பார்த்ததாகப் புகார் சொன்னார்கள். ஆனாலும் தலைவர் என்னைத் தான் நம்பினார்" என்கிறார்
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications