லீக்கான ‘ஜனநாயகன்’.. இஸ்லாமியர்களுக்கு எதிரான வசனங்கள்.. பற்றிக்கொண்ட நெருப்பு.. விஜய்க்கு செக்!
சென்னை: "ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவ்வளவு பஞ்சாயத்தா?" - கோலிவுட்டில் இப்போது இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. லீக் ஆன அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் வசனங்கள் இப்போது புதுக் கிளையினைப் பற்ற வைத்திருக்கின்றன.
லீக் ஆன இரண்டு வெர்ஷன்களையும் (ஒன்று எடிட் டேபிள் வெர்ஷன்.. இன்னொன்று பெரிய திரையில் திரையிடப்பட்ட வெர்ஷன்) 'அக்குவேறு ஆணிவேறாக' அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் நெட்டிசன்கள், அதில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வசனத்தைக் கையில் எடுத்துள்ளனர். படத்தில் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து சில 'அட்டாக்' வசனங்கள் இருப்பதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

'பாய்' வசனமும்... பதற்றமும்!
படத்தில் வில்லன் தரப்பையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலையோ விமர்சிக்கும்போது, 'பாய்' (Bhai) என முஸ்லிம் சமூகத்தினரைக் குறிப்பிட்டுச் சொல்லப்படும் சில வசனங்கள் 'நெகட்டிவ்' டோனில் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. "எல்லாரையும் அரவணைச்சுப் போற 'ஜனநாயகன்'னு சொல்லிட்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் இப்படிச் சித்தரிப்பது சரியா?" என்பதுதான் பலரின் ஆதங்கம். அதோடு பாம் வைக்கும் கதாபத்திரத்திற்கு இஸ்லாமிய தோற்றம் கொடுத்துவிட்டு.. அதற்கு பாய் என்று அழைப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இது யாரோட 'கேம் பிளான்'?
இந்த விவகாரத்திலும் 'திமுக - தவெக' மோதல் ஓயவில்லை. தமிழகமே தேர்தல் ஜுரத்தில் தகித்துக்கொண்டிருக்க, விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண லீக் என்றால் பரவாயில்லை, ஆனால் கசிந்திருக்கும் விதம்தான் ஏகப்பட்ட 'சதி' தியரிகளை முளைக்க வைத்திருக்கிறது.
வெளியாகியுள்ள இரண்டு வெர்ஷன்கள்தான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளன. ஒன்று, பக்கா எடிட்டிங் டேபிளில் இருக்கும் 'ரா' ஃபுட்டேஜ் போன்ற ஒரு டிஜிட்டல் எச்டி வெர்ஷன். மற்றொன்று, ஒரு விஐபி திரையிடலில் (Private Show) இருந்து எடுக்கப்பட்டது போன்ற வெர்ஷன். "சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்ட நிலையில், தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு துல்லியமான ஒரு காப்பி எப்படி வெளியே வந்தது?" என்பதே சினிமா ஆர்வலர்களின் மர்மக் கேள்வி.
திமுக தரப்பு தொண்டர்கள்: "விஜய் தனது அரசியல் லாபத்திற்காக ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்க்க, இப்படி ஒரு 'சர்ச்சை' வசனத்தை வேணுமென்றே படத்தில் வைத்திருக்கிறார். இப்போது அதை லீக் செய்து, 'ப்ரோமோஷன்' தேடிக்கொள்கிறார்கள்" என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
தவெக தரப்பு: "ஆளுங்கட்சி தரப்பு எடிட்டிங் டேபிளில் இருந்த காட்சிகளைத் திருடி, அதில் சில வசனங்களை மட்டும் கட் செய்து வைரல் ஆக்குகிறார்கள். இது முழுக்க முழுக்க விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகக் காட்ட நடக்கும் சதி" என எகிறுகிறார்கள் தவெக நிர்வாகிகள்.
சென்சார் கத்தரி தப்புமா?
ஏற்கனவே சென்சார் போர்டுடன் பெரிய யுத்தமே நடத்தி வரும் 'ஜனநாயகன்' குழுவுக்கு, இந்த 'பாய்' வசன சர்ச்சை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை படம் தியேட்டருக்கு வரும்போது இந்த வசனங்கள் நீக்கப்படுமா அல்லது மியூட் செய்யப்படுமா என்பதுதான் இப்போதைய சஸ்பென்ஸ்.
சினிமா பாலிடிக்ஸ் தாண்டி, இப்போது 'மத' அரசியலும் 'ஜனநாயகன்' படத்தில் நுழைந்திருப்பது, தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications