ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்படுகிறது! புது முடிவு எடுத்த விஜய்.. வாபஸ் வாங்கப்படும் வழக்கு?
சென்னை: ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை.
இப்போது உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்படுகிறது. ஜனநாயகன் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு உடனே ஆய்வு செய்யப்பட்டால் 15 நாட்களுக்குள் ரிலீஸ் ஆகலாம்.

ஆனால் ஒரு தணிக்கை குழு அமைக்க 20 நாட்கள் வரை விதிப்படி அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே குழுவில் இருந்த 5 பேரில் 4 பேர் இந்த குழுவில் இடம்பெற மாட்டார்கள். இதனால் புதிய குழு அமைக்கப்பட வேண்டும். இதற்கு நேரம் எடுக்கலாம். இது போன்ற சமயங்களில் படம் ரிலீஸ் ஆக 30 நாட்கள் கூட ஆகலாம்.
ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் தர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்த நிலையில் அதை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது.
ஜனநாயகன் வழக்கு மீண்டும் தனி நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்படும். ஆனால் இந்த முறை CBFC வாதங்களும் கேட்கப்படும். எல்லோரின் வாதங்களும் கேட்ட பின்பே வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
படத்தின் வழக்கு மீண்டும் தனி நீதிபதியிடம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்புதான் ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படம் எப்போது ரிலீஸ் ஆகும்
ஆப்ஷன் 1 - கேஸ் தனி நீதிபதி அமர்வில் தொடரும் - மறுதணிக்கை செய்யப்படாமல் , தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி அது அமல்படுத்தப்படலாம் .
ஆப்ஷன் 2 - கேஸ் வாபஸ் பெறப்படும் - மறுதணிக்கை செய்யப்படும் - படம் வரும் - சிக்கல் இல்லை
ஆப்ஷன் 3 - கேஸ் வாபஸ் - மறுதணிக்கை செய்யப்படும் - ஆனால் அதை படக்குழு ஏற்காது - மீண்டும் கேஸ் நடக்கலாம்
ஆப்ஷன் 4 - கேஸ் வாபஸ் - படம் வரும் - ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் - இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும்
ஆப்ஷன் 5 - கேஸ் வாபஸ் - படம் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் வரும் - ஆனால் தேர்தல் தேதி அதற்கு சில நாட்களில் அறிவிக்கப்பட்டால் - மீண்டும் கேஸ் போடப்பட்டு தேர்தலை காரணம் காட்டி படம் நிறுத்தப்படலாம்
ஜனநாயகன் வழக்கு கடந்து வந்த பாதை
இதற்கு முன் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதங்களில் ஜனவரி 5-ம் தேதி தயாரிப்பாளர் மனுத் தாக்கல் செய்தபோதே, படத்தை 'மறுஆய்வுக் குழுவுக்கு' (Revising Committee) அனுப்பத் தணிக்கை வாரியத் தலைவர் முடிவெடுத்தது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பு அந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. மாறாக படத்திற்கு சான்றிதழ் வழங்க கேட்டிருந்தனர். ஏற்கனவே நாங்கள் 'மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை அவர்கள் குறிப்பிடவில்லை.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தனி நீதிபதி முன் நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்தார். தயாரிப்பாளர் தரப்பு 'U/A 16+' சான்றிதழ் வழங்க மட்டுமே கோரியிருந்த நிலையில், வாரியத் தலைவரின் உத்தரவைத் தனி நீதிபதி ரத்து செய்தது சரியல்ல. தயாரிப்பாளர் தரப்பு அதை கோரிக்கையாக வைக்கவில்லை.
மேலும் தணிக்கை வாரியத்தின் மண்டல அதிகாரி டிசம்பர் 22-ல் அனுப்பிய கடிதம், 'ஆய்வுக் குழுவின்' (Examining Committee) பரிந்துரை மட்டுமே. அதில் 14 காட்சிகளை நீக்கினால் 'U/A 16+' சான்றிதழ் வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இது தணிக்கை விதிகளின்படி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல, ஒரு இடைக்காலத் தகவல் மட்டுமே.
டிசம்பர் 29-ம் தேதி, டெல்லியில் உள்ள தணிக்கை வாரியத் தலைமையகம், ஜனநாயகம் படத்திற்கு எதிராகப் புகார் வந்துள்ளதால், சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்குமாறு மண்டல அதிகாரியைப் பணித்தது. இது ஜனவரி 5-ல் தயாரிப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டது.
72 நிமிடங்களுக்கு மேல் ஓடும் படங்களுக்குத் தணிக்கை வாரியத் தலைவரே இறுதி முடிவெடுக்க அதிகாரம் கொண்டவர். இந்தப் படத்தின் விஷயத்தில், வாரியத் தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று வாதம் வைத்தார்.
நீதிபதிகளின் கேள்விகள்:
டிசம்பர் 22-ம் தேதி கடிதத்தை அனுப்பியது யார்? அது தணிக்கை வாரியத்தின் முடிவா அல்லது ஒரு ஆலோசனைக் குழுவின் முடிவா? என நீதிபதிகள் வினவினர்.
ஜனநாயகன் படத்தை யார் பார்த்தது மண்டல அதிகாரி படத்தைப் பார்த்தாரா? எனத் தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு ASG "இல்லை, ஆய்வுக் குழு மட்டுமே பார்த்தது" எனப் பதிலளித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், "அப்படியென்றால் ஆய்வுக் குழுவை முழு வாரியமாகக் கருத முடியாது; அது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே" எனக் குறிப்பிட்டனர்.
ஒருவேளை தனி நீதிபதி இந்த வழக்கை இன்னும் விரிவாக விசாரித்திருந்தால், வாரியம் நேரடியாகப் படத்தைப் பார்த்ததா அல்லது ஆய்வுக் குழு போன்ற ஒரு அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பின் மூலம் பார்த்ததா என்ற சட்ட நுணுக்கம் தெளிவாகியிருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மும்பை அல்லது டெல்லியில் இருக்கும் வாரிய உறுப்பினர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் படங்களையும் பார்ப்பது சாத்தியமில்லை. அதனால்தான் ஆய்வுக் குழுக்கள் மற்றும் மறுஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி!












Click it and Unblock the Notifications