Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jananayagan vs Parasakthi: முடியவே முடியாது.. போட்டினா போட்டிதான்! விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. பொங்கல் கிளாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது விஜய் படத்துக்கு போட்டியாக ஜனவரி 10 ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளது. ஜனநாயகனுடன் பராசக்தி நேருக்கு நேர் மோதுவதால், ஜனநாயகன் படத்தின் வசூலும் பெரிதாக அடிபடும் என கூறப்படுகிறது.

ஆயிரம் கோடி, 500 என ரெக்கார்டு பிரேக் வைப்பதில் செக் வைக்கப்பட்டுள்ளதாகவே சினிமா வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. விஜய்க்கு இது கடைசி படம் என்பதால், அவரது தரப்பினர் பராசக்தி படத்தினை முதலில் தள்ளி வைக்க கோரியதாகவும் ஆனால் அதை மறுத்து பராசக்தி படக்குழு முன்கூட்டியே ரிலீஸ் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

jananayagan-vs-parasakthi-sivakarthikeyan-clashes-with-vijay-at-pongal-box-office

விஜய்யின் கடைசி படம்

தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாகவும் டாப் ஹீரோவாகவும் இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு கோட் படம் வெளியானது. தற்போது அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ள விஜய், கைவசம் இருக்கும் ஜனநாயகன் படத்திற்கு பிறகு வேறு படத்தில் நடிக்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.

இதனால் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்துள்ளனர். இதேபோன்று மமிதா பைஜுவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

ஜனநாயகன் vs பராசக்தி

ஜனநாயகன் படத்தை பொறுத்தவரை அரசியல் நெடி அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விஜய்யின் இந்த ஜனநாயகன் படம், தேர்தல் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ரசிகர்கள் தரப்பில் உச்சப்பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்தது.

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் வெளியாவதை விஜய் தரப்பு முதலில் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், பராசக்தி திரைப்பட ரிலீசை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் பேசப்படுகிறது. ஆனாலும் பராசக்தி தயாரிக்கும் டான் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.

ரூ.1,000 கோடி வசூல் செய்யுமா

இந்த சூழலில்தான் தற்போது பராசக்தி படம் முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனநாயகன் படம் வெளியாகும் மறுநாளே ( ஜன.10) பராசக்தி வெளியாகிறது. இதனால் தியேட்டர்களில் காட்சிகள் கிடைப்பதில் ஜனநாயகனுக்கும் பராசக்திக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய கலெக்‌ஷனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவும் ரூ.1,000 கோடி, 500 கோடி என வசூல் விவரங்களை பெரிதாக எதிர்பார்க்கும் நிலையில், பராசக்தி வெளியாவதால் ஜனநாயகனுக்கு இந்த போட்டியை சமாளித்து கலெக்‌ஷனில் ரெக்கார்டு வைக்குமா என்பது கடும் சவால்தான்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை கொடுத்து விஜய் கவுரவப்படுத்தியதாகவும், ஆனால் அந்த நன்றியை மறந்து அவரே இப்போது விஜய்யுடன் மோத தயாராகி விட்டார் என்று சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+