அமெரிக்காவை தூக்கி சாப்பிடும் சென்னை! ஜப்பான் மொழியில் வந்த பாராட்டு! புகழ்ந்து தள்ளிய சுற்றுலா பயணி
சென்னை: இந்தியாவிலேயே மிக விரிவான பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட நகரமாக சென்னை இருக்கிறது. நம்ம சென்னைக்கு சர்வதேச மகுடமாக, ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நம்ம சிங்கார சென்னை மெட்ரோ ரயிலைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் சப்வேயை விட மிகச் சிறந்தது என அவர் பாராட்டியுள்ளது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், டிராபிக் சிக்கலைத் தீர்க்க பொது போக்குவரத்து தான் ஒரே வழியாக இருக்கிறது. பொதுப் போக்குவரத்து என்று வரும்போது இந்தியாவிலேயே மிக சிறந்த பொது போக்குவரத்தைக் கொண்ட நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கிறது. இதைப் பலரும் புகழ்ந்து நாம் கேட்டிருப்போம்.

சென்னை மெட்ரோ
இதற்கிடையே சென்னைக்கு மற்றொரு மகுடமாக நகரின் மெட்ரோவை ஜப்பானை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மனதார பாராட்டி இருக்கிறார். அமெரிக்காவில் புகழ்பெற்ற நியூயார்க் சப்வேயை காட்டிலும் சென்னை மெட்ரோ மிக சிறப்பாக இருப்பதாக அவர் பாராட்டி தள்ளியுள்ளார். குறிப்பாக கோடை காலத்தில் வெப்பம் படுத்தி எடுக்கும் சூழலில், மெட்ரோ அதிவேகமாக மற்றும் குளுகுளு பயணத்தை நமக்கு தருகிறது.
ஜப்பானைச் சேர்ந்த அந்தச் சுற்றுலாப் பயணி, சென்னையில் கிளாம்பாக்கம் டூ கோயம்பேடு வரை சென்றுள்ளார். அதில் அவர் பகுதியளவு மெட்ரோவிலும் பயணித்துள்ளார். அப்போது தான் மெட்ரோவின் தரத்தைப் பார்த்து வியந்து போனாராம். நகரின் மெட்ரோ சேவை வியக்கத்தக்க வகையில் இருப்பதாக அவர் ஜப்பானிய மொழியிலேயே பாராட்டியுள்ளார்.
🇮🇳インド、チェンナイ
— Hiro_bkp48 (@hiro_bkp48) May 24, 2026
メトロに乗って長距離バスの乗り場ロケハンへ。このホーム、ホームドアがあってACが効いてる。NYの地下鉄より設備は完全に上(笑) pic.twitter.com/K2HdodtkOb
ஜப்பான் சுற்றுலா பயணி
இது தொடர்பாக அவர், "சென்னையில் பேருந்து முனைய ரூட் எப்படி இருக்கிறது என்பதை ஆராய மெட்ரோவில் பயணித்தேன். இந்த பிளாட்பாரத்தில் அதிநவீன ஸ்கிரீன் டோர் வசதிகள் உள்ளன; ஏசியும் சும்மா ஜம்முனு ஒர்க் ஆகிறது. ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால், இது அமெரிக்காவின் நியூயார்க் சப்வேயை விட முற்றிலும் உலகத்தரம் வாய்ந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
அவரது போஸ்ட் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். நெட்டிசன் ஒருவர், "சென்னை மெட்ரோ உண்மையிலேயே செம மாஸ்! நான் 2017 முதலே இதைப் பயன்படுத்தி வருகிறேன்" என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "பெங்களூர், ஹைதராபாத் என்று பலரும் ஓவராக ரொமாண்டிசைஸ் செய்கிறார்கள்.. ஆனால் நம்ம 'OG' சிட்டியான சென்னைக்குள் கால் வைத்தால் தான் உண்மையான தரம் புரியும்" என பதிவிட்டு இருக்கிறார்கள்.
மற்றொரு நபர், "ஜப்பானின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், பிரான்சின் ஆல்ஸ்டாம் ரயில்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. நாட்டில் மிகச் சரியாகப் பராமரிக்கப்படும் மெட்ரோ நெட்வொர்க் சென்னை மெட்ரோ தான்!" என அதன் பதிவிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில ஊர்களில் மெட்ரோவுக்கு பயணிகளே வராமல் இருக்கும் சூழலில், சென்னைவாசிகளின் தினசரி வாழ்வாதாரப் பயணங்களின் உயிர்நாடியாக மெட்ரோ மாறியுள்ளதை அதன் தற்போதைய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 90.18 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர். குறிப்பாக ஏப்ரல் 2ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 3,65,807 பயணிகள் பயணித்து மெகா ரெக்கார்ட் படைத்துள்ளனர்.
சாதனை
இதற்கு முன்பாக கடந்த 2025 ஜூலையில் 1.04 கோடியும், செப்டம்பரில் 1.01 கோடியும் என மாதப் பயணிகள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. தற்போது எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாகப் புறநகர் ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் அசுர வேகத்தில் மெட்ரோவை நோக்கிப் படையெடுத்து வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் (சுமார் 45 லட்சம் பேர்) தங்களின் 'சிங்காரச் சென்னை' ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தியே டிஜிட்டல் முறையில் பயணிக்கின்றனர்.
இப்போது சென்னை மெட்ரோ 2வது கட்டம் கட்டுமானத்தில் உள்ள நிலையில், அதுவும் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் நாட்டில் விரிவான மெட்ரோவை கொண்ட நகரங்களில் ஒன்றாக சென்னை மாறும். இது நகரின் உட்கட்டமைப்புக்கு மிக பெரிய ஒரு பூஸ்ட்டை கொடுக்கும்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications