ஜப்பான் சுனாமி.. பல வருடங்களுக்கு முன்பே.. பக்காவாக கணித்த ஜப்பானின் புதிய பாபா வங்கா.. வியப்பு
சென்னை: ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட சுனாமியை ஜப்பானின் புதிய பாபா வங்கா முன்கூட்டியே கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரின் கணிப்பு தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இது ஜப்பானின் வடக்குப் பகுதியான ஹொக்கைடோ மற்றும் ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. இப்பகுதியில் 1952ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த பூகம்பம் இதுவாகும்.

ஜப்பான் ரஷ்யா சுனாமி
இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் பெரிய அலைகள் ஏற்பட்டன. அமெரிக்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து உட்பட பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தது. ஜப்பானில், அபாய ஒலிகள் ஒலித்தன, மேலும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
முன்பே கணித்த ஜப்பானின் புதிய பாபா வங்கா
இந்த நிகழ்வை ஜப்பானின் புதிய பாபா வங்கா முன்கூட்டியே கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜப்பானிய மங்கா கலைஞர் மற்றும் தன்னைத்தானே ஒரு தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் ரியோ டட்ஸ்கி என்பவரின் கணிப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சக்திவாய்ந்த இயற்கை பேரழிவை அவர் முன்கூட்டியே கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
"ஜப்பானின் புதிய பாபா வங்கா" என்று அழைக்கப்படும் டட்ஸ்கி, தனது 1999ஆம் ஆண்டு மங்கா புத்தகமான "தி ஃபியூச்சர் ஐ சா" என்பதில், தெற்கு ஜப்பானைச் சுற்றியுள்ள கடல்கள் ஜூலை 5, 2025 அன்று "சுனாமி அலையை சந்திக்கும்" என்று எழுதியிருந்தார்.
குறிப்பிட்ட அந்த நாளில் பெரிய பூகம்பம் ஏதும் நிகழவில்லை என்றாலும், இன்று ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுனாமி ஆகியவை அவரது கணிப்பு குறிப்பிட்ட நாளைக் குறிக்காமல் அந்த மாதம் முழுவதிற்குமான எச்சரிக்கையாக இருக்குமோ என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது. அவர் சரியாக கணித்துவிட்டார்.. ஆனால் தேதி கொஞ்சம் மாறி இருக்கலாம். இதனால் அவரின் கணிப்புகள் துல்லியமாக நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக #July5Disaster போன்ற ஹேஷ்டேக்குகளுடன் ஜப்பானிய சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகிறது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது
இதன் காரணமாக 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து கடற்கரையில் மோதியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சுனாமி
ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4 மீட்டர் (13 அடி) உயரம் வரை சுனாமி அலைகளை உருவாக்கியது. இதனால் அப்பகுதி மற்றும் ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பசிபிக் முழுவதும் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல தீவு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை பெரிய காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, சுனாமி ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவின் கடலோரப் பகுதிகளையும் தாக்கியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications