ஒரே நாளில் ரூ.3500 சரிவு.. சரசரவென குறைந்த மல்லிகை விலை! பனி குறைந்ததுமே குவிய தொடங்கியது மல்லிப்பூ!
சென்னை: மல்லிகைப்பூ விலை தாறுமாறாக எகிறி இருந்ததால் சாலையோர பூக்கடைகளில் மல்லிப்பூவே விற்கப்படாத நிலை இருந்தது. இந்நிலையில், தற்போது மல்லி பூக்கள் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ இன்று ரூ.3500 வரை குறைந்து, ரூ.1350 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை செடிகளிலேயே மொட்டுக்கள் சிறுத்து பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் வரத்தும் வெகுவாக குறைந்தது. வரத்துக் குறைவு மற்றும் தேவை காரணமாக பூக்களின் விலை தடாலடியாக எகிறியது.
மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 7,000, 8000 என விற்பனை ஆனது. தற்போது தேவைகள் குறைந்ததாலும், பனிப்பொழிவு காலம் மாறி வருவதாலும், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று (பிப்ரவரி 9) ஒரே நாளில் மல்லிகையின் விலை கிலோவுக்கு ரூ. 3,500 வரை குறைந்துள்ளது. அதன்படி, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1350 ஆக விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் மல்லிகை சாகுபடி அதிகம் உள்ளது. சில மாதங்களாக நிலவிய சாரல் மழை, பனியால் மல்லிகை விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கிலோ ரூ.4000 முதல் 8,000 வரை மல்லிகை விலை இருந்தது. தற்போது வெயில் துவங்கியதால் மல்லிகை பூக்கள் விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிலோ ரூ. 500 முதல் 1000 வரை விலை உள்ளது.
கோடை காலத்தில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகம் இருக்கும். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு ஒரு சில கிலோ அளவில் இருந்த மல்லிகை வரத்து தற்போது 500 கிலோ அளவில் உயர்ந்துள்ளது. மல்லிகை விளைச்சல் துவங்கி உள்ளதால் மல்லிகைப்பூக்கள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கி உள்ளன. இதனால் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. விளைச்சல் இன்னும் அதிகரிக்கும்போது மல்லிப்பூ விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications