தமிழ்நாட்டுக்கு தனி கொடி- தமிழக அரசு வடிவமைக்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்
சென்னை: தமிழ்நாட்டுக்கு என தனியாக ஒரு கொடியை தமிழக அரசு வடிவமைக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் விடுதலைக்குப் பின் நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, 'மாநில மறுசீரமைப்புச் சட்ட'த்தை இயற்றினார். அதன்படி, 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது.

தமிழகம் சென்னை மாநிலம் என்றும், கர்நாடகம் மைசூர் மாநிலம் என்றும் கேரளம் தனியாகவும் நவம்பர்-1, 1956-ல் தனித்தனி மாநிலங்களாகின. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர்- 1ஆம் தேதியை நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவர்களுக்கான தனிக்கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறார்கள். தமிழக அரசு 2019-ல்தான் முதன்முதலாக அரசு விழாவாகக் கொண்டாடியது.
தமிழ்நாட்டுக்கு என்று தனியாக கொடி எதுவும் வடிவமைக்கப்படவில்லை. கர்நாடக அரசு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கென தனித் தனியே கொடிகளை அடையாளப்படுத்தி ஏற்றி மகிழ்ந்திடுவதுபோல், தமிழ்நாட்டு மக்களும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியினை ஏற்றிக் கொண்டாடிட ஏதுவாக, தமிழ்நாடு தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் கருத்தறிந்து தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டுக் கொடியை வடிவமைத்து அறிவித்திட வேண்டும்.
இந்த பெரும் விழாவை தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும், மாநகராட்சி முதல் ஊராட்சி அலுவலகங்கள் வரையிலும் உள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அரசு அறிவித்திட வேண்டும். நவம்பர் 1ஆம் நாளை விடுமுறை நாளாக அறிவித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. சாதி மதங்களைக் கடந்து தமிழர்கள் ஒருங்கிணைவதற்கு இந்த முன்னெடுப்பு உதவியாக இருக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சியும் கருதுகிறது. தமிழக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த முன் முயற்சி மேற்கொள்ளுமாறு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications