விவசாயிகள் பாவம்... தயவு செய்து இது வேண்டாம்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஜவாஹிருல்லா..!
சென்னை: நெல் கொள்முதல் நடைமுறையில் பழைய முறையையே தொடர வேண்டும் என்றும் புதிய முறையான ஆன்லைன் பதிவு முறையால் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொள்வார்கள் எனவும் கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
விவசாய பெருங்குடி மக்கள் தன்னிடம் முறையிட்டதை அடிப்படையாக வைத்து இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

நெல் கொள்முதல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு ஆன்லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தப் புதிய முறையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யவேண்டிய நிலம் மற்றும் சாகுபடி விவரங்களை அதற்கென அளிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் ஸ்மார்ட் போன், இ-சேவை மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

விவரங்கள்
இந்த விவரங்கள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அனுமதி அளித்தவுடன், அந்த விவசாயியின் செல்போன் எண்ணுக்கு, நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு எப்போது கொண்டு வர வேண்டும் என குறுந்தகவல் வரும், அப்போது எடுத்துச் சென்று விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவு
இந்த ஆன்லைன் பதிவு முறையானது விவசாயிகளுக்கு புதியதோர் சுமையாக அமைந்துள்ளது. விவசாயிகளில் பலர் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்து வருகின்றனர். பலருக்கு நிலத்தின் பட்டா எண்கூட தெரியாது. மேலும் உதாரணத்திற்கு தந்தை பெயரில் ஒரே சர்வே எண்ணில் உள்ள நிலத்தில், அவரது 3 மகன்கள் தனித்தனியே சாகுபடி செய்யும்போது, ஆன்லைன் பதிவில் அந்த சர்வே எண்ணுக்குரிய நிலம் முழுவதுக்கும் ஒரே நேரத்தில்தான் விற்பனை செய்ய அனுமதி கிடைக்கும்.

காலதாமதம்
இதனால், அறுவடை செய்வதில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆன்லைன் பதிவில் சர்வே எண் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் சிறு தவறு செய்தாலும் கூட நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படும்.

இழப்புக்கு வாய்ப்பு
உடனடியாக அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிரை ஆன்லைன் பதிவு மூலம் 2 வாரங்கள் கழித்து கொள்முதலுக்கு அனுமதி கிடைக்குமேயானால், இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் நெல்மணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

அன்புடன்
விவசாயிகளில் கணிசமானோர் இணையதளம், ஸ்மார்ட் ஃபோன் போன்ற நவீன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பதால், பழைய நிலையிலேயே நெல்கொள்முதல் பணியைத் தொடர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications