வணக்கத்திற்குரிய வேண்டாம்! மாண்புமிகு மேயர் என்பதே தொடர வேண்டும்! ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
சென்னை: மாண்புமிகு மேயர் என்றழைக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஏக இறைவனை தவிர வேறு யாரையும் வணக்கத்திற்குரியவராக அழைக்க கூடாது என்பது முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அமைச்சர் சுப்ரமணியன்
சென்னை கே.கே.நகரில் 23-வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மேயரை மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என அதிமுக ஆட்சி காலத்தில் மாற்றப்பட்ட அரசாணையை வணக்கத்திற்குறிய மேயர் என மாற்றுவது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று பேசியுள்ளார்.

அதிமுக ஆட்சியில்
கடந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்களை தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அப்படியே தொடர அனுமதித்துள்ளார். அதற்கு நல்ல உதாரணம் அம்மா உணவகம், முன்னாள் முதல்வர்கள் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட புத்தகப் பைகள் வினியோகம் உள்ளிட்ட பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

முஸ்லீம்களின் கொள்கை
பன்மை சமூகமும் கலாச்சாரமும் நிரம்பியுள்ள தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏக இறைவனை தவிர வேறு யாரையும் வணக்கத்திற்குரியவராக அழைக்க கூடாது என்பது முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை. எனவே மாநகராட்சி மேயர்களை மாண்புமிகு மேயர் அவர்களே என்று அழைப்பதே தொடர வேண்டும். அதனை மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது.

அரசமைப்புச் சட்டம்
அத்தகைய மாற்றம் கொண்டு வரப்பட்டால் அது அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 அளிக்கும் உரிமையை பறிப்பதாகும். எனவே மாண்புமிகு மேயர் அவர்களே என்று அழைக்கும் நடைமுறை தொட தமிழக முதலமைச்சர் ஆவனச் செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications