அரசியல் அதிசயம்! ஆளுநர் ரவிக்கு முதல்முறையாக நன்றி கூறிய ஜவாஹிருல்லா! என்ன பின்னணி?
சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை கோப்பில் கையெழுத்திட்டதற்காக ஆளுநர் ரவிக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நன்றி கூறியுள்ளார்.
எப்போதுமே ஆளுநர் ரவியை விமர்சித்து மட்டுமே அறிக்கை விடுபவர், முதல்முறையாக நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;

தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயம் கோரிக்கை வைத்து வந்துள்ளது. 2011 -2016 வரை நான் இராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் இக்கோரிக்கையை முன்வைத்து பல முறை சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளேன். அப்போதிருந்த அதிமுக அரசு இக்கோரிக்கையை ஏற்க மறுத்தது.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக அவரிடம் நேரில் இக்கோரிக்கையை முன் வைத்த போதும் கூட அவர் இதற்குச் செவிசாய்க்கவில்லை.
திமுக ஆட்சி மலர்ந்த பிறகு நாங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நீண்ட காலச் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாகப் பரிசீலனை செய்வதற்கு நீதியரசர் ஆதிநாதன் குழுவை முதலமைச்சர் அமைத்தார். இதன் பிறகு நீதியரசர் ஆதிநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் 20 முஸ்லிம்கள் உட்பட 49 நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து அது தொடர்பான கோப்புகளை ஆளுநருக்குக் கடந்த ஆகஸ்ட் 24. 2023 அன்று அனுப்பியது.
இந்த கோப்புகள் உட்படத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகள் உட்படப் பல கோப்புகளை ஆளுநர் ஆர். என். ரவி கிடப்பில் வைத்திருந்தார். நீண்ட காலச் சிறைவாசிகள் உட்பட மாநில அரசின் கோப்புகளை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஆளுநர் அவர்கள் 10 முஸ்லிம்கள் உட்பட உட்பட 17 நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலைக்கான கோப்பில் கையொப்பமிட்டுள்ளார்.
எம் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இன்று 10 நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையின் சுவாசத்தை அனுபவிக்க வழிவகுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக ஆட்சியில் சாத்தியமாகாதது திராவிட மாதிரி ஆட்சியில் சாத்தியமாகியுள்ளது. 17 நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை கோப்பில் கையெழுத்திட்ட தமிழ்நாட்டின் ஆளுநருக்கு எமது நன்றி. எஞ்சிய 9 முஸ்லிம்கள் 32 நீண்ட காலச் சிறைவாசிகளின் விடுதலை கோப்பில் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications