திருமாவளவன் வீரம் எங்கே போனது? ஸ்டாலினை பார்த்து கேட்காமல்.. விளாசிய ஜெயகுமார்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடி ஏற்ற முதல்வர் அனுமதி அளித்தால் தான், அனுமதி கிடைக்கும் என்கிற போது எய்தவன் இருக்க அம்பை குறை சொல்வது போல, ஸ்டாலினை விடுத்து காவல்துறையை கருப்பு ஆடு என திருமாவளவன் விமர்சிப்பது என்ன நியாயம்? வீரம் செறிந்த திருமாவளனின் வீரம் எங்கே போனது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அதே வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் 46வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ஜெயக்குமார் கேள்வி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. கூட்டணிக் கட்சியான விசிகவுக்கே இந்த நிலைமை எனவும், அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் அனுமதி தேவை
முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்தால் தான், அனுமதி கிடைக்கும் என்கிற போது எய்தவன் இருக்க அம்பை குறை செய்வது போல, ஸ்டாலினை விடுத்து காவல்துறையை கருப்பு ஆடு என திருமாவளவன் விமர்சிப்பது என்ன நியாயம்? வீரம் செறிந்த திருமாவின் வீரம் எங்கே போனது.
Recommended Video

என்ன நடந்தது
முதல்வர் ஸ்டாலினின் திடீர் ஆய்வுகள் குறித்த கேட்கிறீர்கள் (செய்தியாளர்கள் கேட்டனர்), முதல்வரின் திடீர் ஆய்வுகளால் பிரயோஜனமாக என்ன நடந்துள்ளது. பென்னாகரத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட போது, மாணவர்களுக்கு தினமும் முறைப்படி வழங்க வேண்டிய பொரியல் இல்லை என தெரிந்தும், அதைப்பற்றி எதுவும் கேட்காமல் வணக்கம் கூறி சென்று விட்டார்.

ஜெயக்குமார் கேள்வி
கொள்கை விளக்க குறிப்பேட்டில் மதிய உணவு திட்டத்தில் சாதம், சாம்பார், ரசம், பொறியல் என உள்ள போது, பொறியல் இல்லாததற்கு யார் காரணம், அப்படி என்றால் அந்த துறை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் போவதன் பெயர் தான் ஆய்வா" இவ்வாறு ஜெயக்குமார் கேள்வி எழுப்பி செய்தியாளர்களிடம் பேசினார்.

முதல்வருடன் சந்திப்பு
ஜெயக்குமார் திருமாவளன் குறித்து கேள்வி எழுப்ப என்ன காரணம். குறிப்பிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது. திருமாவளன் சொல்லும் விளக்கம் என்ன என்பதை இப்போது பார்ப்போம். சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவது தொடர்பாக காவல் துறையினர் தடை விதித்ததால் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில். சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்றத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டேன். மோரூரில் சாதியவாத சக்திகள் மற்றும் காவல் துறையினர் தலித் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டனர்.

போராட்டம் தேவையில்லை
இதுகுறித்து பேச முதல்வர் ஸ்டாலின் தயாராக இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை சந்தித்து அது குறித்து பேசினோம். அனைத்து விவரத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், இதுதொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். எனவே சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்றும் விவகாரம் தொடர்பாக திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடத்த இனி தேவை இருக்காது என்று விளக்கம் அளித்தார்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications