ரோஸ் சட்டை, ப்ளூ பேண்டில் வடை கடையில் மாஜி.. வடிவேல் ஸ்டைலில் இது நல்லெண்ணெய்யானு கேட்ட ஜெயக்குமார்
சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில் ஒரு ரோட்டோர கடையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரவடை சாப்பிட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தொண்டர்களின் இல்ல விசேஷங்களுக்கு சென்றுவருகிறார். இதை அவருடைய சமூகவலைதள பக்கத்திலும் அப்லோடு செய்கிறார். அவர் அனைவருடனும் அன்பாக பழகக் கூடியவர். குறிப்பாக ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைத்து தரப்பினருடனும் சகஜமாக பழகுவார்.

பிரஸ் மீட்டில் கூட அவரை கோபப்படுத்தும் கேள்விகளை கேட்டாலும் அதற்கு பொறுமையாக பதிலளிப்பார். இவரது எளிமையும் எளிதான அணுகுமுறையும் தொண்டர்களுக்கு பிடித்துவிட்டதால் இவருடைய அன்புக்காக எப்போதும் தொண்டர்கள் இவருடன் இருந்து கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில் ஜெயக்குமார் நேற்று மூலக்கொத்தளத்திற்கு ஒரு விசேஷத்திற்காக சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ரோட்டு கடையில் வடை சுடுவதை கண்டார். உடனே மாஜி அமைச்சர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சென்றார். அங்கிருந்தவர்கள் சேர் எடுக்க செல்கிறார்கள், அதெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டு அங்குள்ள ஒரு வீட்டின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தார். அப்போது அந்த பெண் ஒரு பேப்பரில் வைத்து காரவடையை தர, அதற்கு ஜெயக்குமார் சூடாக கொடுங்கம்மா என்கிறார்.
அதற்கு அந்த பெண் வேகுது தரேன் என்கிறார். உடனே ஜெயக்குமார் வேகட்டும் வேகட்டும் , பாதில எடுத்துர போறீங்க என்கிறார். பிறகு ஏம்மா இது நல்ல எண்ணெய்தானே (ஆரோக்கியமான எண்ணெய்யா) என கேட்கிறார். அதற்கு ஆமாம் சார் என அந்த பெண் சொல்ல, என்ன எண்ணெய் என ஜெயக்குமார் கேட்க அதற்கு அவர் பாமாயில் சார் என்கிறார்.

ஒரு நாளைக்கு எவ்ளோ வருமானம் வருதும்மா என ஜெயக்குமார் கேட்க அதற்கு ரூ 300 என்கிறார். அந்த பெண் நின்று கொண்டு வடை சுட்ட போது ஜெயக்குமார் உட்கார்ந்து வடை சுடுமா என்கிறார். பிறகு அவருடன் வந்தவர்கள் வாழை இலையில் குடுங்கம்மா என்கிறார்கள். அந்த பெண் வாழை இலைக்காக பரபரப்பாகிறார். இதை தெரிந்து கொண்ட ஜெயக்குமார், அவரது ஆதரவாளர்களிடம் பாவம்பா இலை எல்லாம் வேண்டாம், பேப்பரே போதும் என்கிறார்.
பின்னர் அந்த பெண் வடையை பேப்பரில் வைத்துக் கொடுக்கிறார். வடை சாப்பிடுங்க சார், இது பேமஸ் கடைதான், நீங்கள் இதை வீடியோ எடுத்து பேமஸாகிவிடுங்கள் என்கிறார். ஜெயக்குமார், உடன் வந்தவர்களுக்கு எல்லாம் வடையை கொடுத்துவிட்டு தானும் சாப்பிடுகிறார். வடை நன்றாக இருக்கிறது என்கிறார். பிறகு பணம் எவ்வளவு ஆச்சு என கேட்கிறார். அதற்கு உடனிருந்தவர்கள் நான் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால் ஜெயக்குமார் அதெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டு அவரே ரூ 500 கொடுக்கிறார். பின்னர் 10 வடைகளையும் பார்சல் செய்துக் கொண்டு செல்கிறார்.

மதியம் 1.30 மணிக்கு வடையை பார்த்ததும் பசி வந்துவிட்டதும்மா என்கிறார். இதற்கு தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும் என்கிறார். அதற்கு அந்த பெண் நீங்கள் வருவது தெரிந்திருந்தால் அரைத்திருப்பேன் என்கிறார். இப்படியாக பார்சல் வடையை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஜெயக்குமார் புறப்பட்டு செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. தனது ராயபுரம் தொகுதியில் எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் நிற்பவர் ஜெயக்குமார்தான். பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தொகுதி மக்களுக்காகவும் போராடுவார்.
ஒரு முறை சாலை விபத்தில் சிக்கிய மூதாட்டியை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அது போல் அதிமுக மாநாட்டுக்கு செல்லும் வழியில் விக்கிரவாண்டி அருகே சாலையோர நிழலில் அமர்ந்து ஜெயக்குமார் பிரியாணி சாப்பிட்ட வீடியோவும் டிரெண்டானது.
-
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications