கல்லூரி மாணவர்கள் கப்பலில் காலேஜுக்கு போவாங்களா? என்னங்க கொடுமை.. பாய்ந்து வந்த ஜெயக்குமார்!
சென்னை: கல்லூரி மாணவர்கள் என்ன கப்பலில் கல்லூரிக்கு செல்வார்களா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், கடல் போல காட்சியளிக்கிறது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இன்றும் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய அரசு!
— DJayakumar (@djayakumaroffcl) November 30, 2023
சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளுவர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும்.
மாணவர்கள் என்ன கப்பலில் கல்லூரி செல்வார்களா?#ChennaiRains pic.twitter.com/lMOoC120mW
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய அரசு! சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். மாணவர்கள் என்ன கப்பலில் கல்லூரி செல்வார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications