திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு குளிர் விட்டு போச்சு.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்!
சென்னை: திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை கண்டித்து, அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவது தொடர்பாக தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மாநில, மாவட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டனர்.
தொடர்ந்து உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அடையாள அட்டையை வழங்கியும், அவர்களுடன் குழு படமும் எடுத்து கொண்டனர். அதன்பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொழிலாளர்கள்
திமுக அரசு, தொழிலாளர்கள் பிரச்சினையை காது கொடுத்து கேட்கவில்லை. விளம்பர அரசியலை திமுக அரசு செய்து, தொழிலாளர்களை வஞ்சிக்கிற அரசாக இருக்கிறது. மேலும் கொலை, கஞ்சா, போதை, கூட்டு பாலியல் பலாத்காரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

பொதுமக்கள்
தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டு போய்விட்டது. குற்றங்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு போட்டு அதிமுகவினரை கைது செய்யும் வேலையை தான் திமுக செய்து வருகிறது.

காவல் துறை
அரசியல் தலையீடு இருப்பதால் காவல் துறை முறையாக விசாரணை நடத்த முடியவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை கண்டித்து, அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவது தொடர்பாக தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.

அரசியல் தலையீடு
அதேபோல் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்றும், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று உறுதியாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டதாக அதிமுக, பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் தற்போதுதான் திமுக அமைதிப் பூங்காவாக இருப்பதாக திமுக கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!












Click it and Unblock the Notifications