தமிழக கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது.. சட்டம் போட்டு பின் வாங்கிய ஜெயலலிதா
சென்னை: சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட் ஒன்று பேசுபொருளாகி வரும் நிலையில், தமிழக கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டம் போட்டு பின் வாங்கிய வரலாறு நடந்துள்ளது. அதனை பற்றி பார்ப்போம்-
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது என்ற ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதே இல்லை 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்து, ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அந்த சட்டத்தை செயல்படுத்துமாறு கடந்த 2003ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக அன்றைக்கு ஜெயலலிதா விடுத்த அறிவிப்பில், கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக்கூடாது என்று தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த செயல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
இனிமேல் கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலைசெய்யக் கூடாது.
அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெயலலிதா கடந்த 2003ம் ஆண்டு கூறியிருந்தார்.
வழக்கமாக பெரிய கோவில்கள் தவிர்த்து, பிற இந்துக் கோவில்களில் ஆடு,கோழிகளைப் பலியிடுதல் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கு தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதுபற்றி அன்றைக்கு வெளியான திருப்பாச்சி படத்தில் விஜய் நடிப்பில் ஒரு காட்சி கூட வந்திருக்கிறதாம்.
"உயர் ஜாதி கட்சி" பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டு வழிபாடுக்கு தடை போடுவாங்க: கார்த்தி சிதம்பரம்
இதனிடையே கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது என்ற உத்தரவிற்கு பக்தர்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும், கடும் எதிர்ப்புக்குரல் வந்தது. அந்த உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தார்கள். இதையடுத்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்று அறிவித்தார். இது தான் தமிழகத்தில் அன்று நடந்த சம்பவங்கள் ஆகும்..
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் நடந்த பிரச்சாரத்தில் பேசுகையில், புனிதமான சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சியினர் புண்படுத்துகின்றனர்" என்று கூறியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி ட்வீட் போட்டிருக்கும் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரம், நான் சொன்னது போலவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக வட இந்திய மேல்சாதி சமஸ்கிருத சைவ "இந்துத்துவா" என்று பிரச்சாரம் செய்கிறது, இது கிராமப்புற தென்னிந்திய நம்பிக்கை நடைமுறையில் இருந்து மிகவும் வேறுபட்டது என்று கார்த்தி சிதம்பரம் தனது பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஒருவேளை கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால் , அதற்கு தமிழகத்தில் நடந்ததை போன்று இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மத்திய அரசு தரப்பில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் விவாதங்கள் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்ககது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications