341வது பக்கம்.. இதை மட்டும் செய்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம்! ரிப்போர்ட்டில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணையின் ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சந்தேகங்களை ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பி உள்ளது. முக்கியமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு கேள்விகளை ஆணையம் எழுப்பி உள்ளது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

ஜெயலலிதாவிற்கு சரியாக ஆஞ்சியோ சிகிச்சைஅளிக்கப்படாததும், அவருக்கான வெஜிடேஷன் தொற்று அகற்றப்படாததும் அவரின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதில், மறைந்த முதல்வர் 22.09.2016 அன்று மயக்கமடைந்த பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. இரத்தப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு, பதிவுகளை ஆராய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள், எல்.வி. ஃபெய்லியர் மற்றும் தொற்று ஆகியவற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வெஜிடேசன் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

சந்திப்பு

சந்திப்பு

டாக்டர் சமின் ஷர்மாவை மறைந்த முதலமைச்சரை சந்திக்க அழைத்துச்சென்றபொது பரிசோதனைக்குப் பின்னர், மருத்துவ பதிவுகளைப் பார்த்து "அவரே கொரோனரி ஆஞ்சியோகிராம் செய்யவும், அச்சிகிச்சை செய்ய தயாராகவும் இருந்தார், ஆனால் மருத்துவமனை நடவடிக்கை எடுக்கவுமில்லை, அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கவுமில்லை" என கூறினார்.

அறிக்கை

அறிக்கை

மறைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே டாக்டர்.சோமன் அறிவுறுத்திய பிறகும், அவர்கள் ஆஞ்சியோ செய்யவில்லை. நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் இதயக் கோளாறு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அப்போலோ ஆவணங்கள் படி அவருக்கு இதயத்தில் பாதிப்பு இருந்ததும், அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதை பற்றி கேட்டபோது, அவர் ஒரு தீவிரசிகிச்சை மருத்துவர் மட்டுமே; அதனால் அவருக்கு அது குறித்து எக்கவலையும் இல்லை என்றும், இதனால் ஆஞ்சியோ ஒத்திவைக்கப்பட்டது என்றும், அதற்கு எந்த விளக்கமும் இல்லை என்றும் சாதாரணமாகக் கூறுகிறார்.

 உயிர் சிகிச்சை

உயிர் சிகிச்சை

அவரின் உயிரை காக்க வேண்டிய முக்கியமான அறுவை சிகிச்சையை அவர்கள் செய்யாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு குறிப்பிடத்தக்க புள்ளி என்னவென்றால், சென்னையில் பல தசாப்தங்களாக இதய அறுவை சிகிச்சையின் மூத்த மருத்துவர்களான டாக்டர் கிரிநாத் மற்றும் டாக்டர் செரியன், மறைந்த முதல்வர் உயிருடன் இருந்தபோது, அவரை பரிசோதனையும் செய்யவில்லை, மற்றும் அவருடைய கருத்தினை நோய் விவர குறிப்புத்தாளில் (கேஸ் சீட்) எழுத்துமூலமாக குறிப்பிடவில்லை.

ஆஞ்சியோ

ஆஞ்சியோ

பொருத்தமான நேரத்தில் ஆஞ்சியோவை மேற்கொள்வது குறித்து கருத்தையும் தெரிவிக்கவில்லை அப்படி செய்திருந்தால், அது இதய செயலிழப்பை தவிர்த்திருக்கும். இதை டாக்டர் ரிச்சர்ட் பீலே 01.10.2016-ஆம் நாளிட்ட தனது ஆரம்ப அறிக்கையில் (மறைந்த முதல்வருக்கு பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு ஏற்பட வாய்ப்புகள் இருந்தன) சுட்டிக்காட்டியிருந்தார். டாக்டர்.ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மற்றும் டாக்டர்.சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோவை விரைவாகச் செய்ய ஆலோசித்ததைக் கருத்தில் கொண்டு, டாக்டர்.பாபு ஆபிரகாம் மற்றும் டாக்டர்.V.V.C. ரெட்டி. அவர்களது குழுவுடன் சேர்ந்து, இந்த விலைமதிப்பற்ற உயிர்காக்கும் செயல்முறையை மேற்கொள்ளவில்லை.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?


நவம்பர் 2016 இல் அவர் சிறிய அளவில் குணமடைந்த பிறகும், எய்ம்ஸ் மருத்துவர் யாரும் அவரைச் சந்திக்கவில்லை. R.2-மருத்துவமனை மட்டும் இன்னும் கொஞ்சம் விடாமுயற்சியுடனும், கவனத்துடனும் செயல்பட்டு நிபுணத்துவம் வாய்ந்த தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களையும் ஆரம்ப நிலையிலேயே நேர்மறையான கருத்தைக் அனுமதித்திருந்தால் அது அனைத்து வகையிலும் கூற நன்மையாக இருந்திருக்கும்.

காப்பாற்றி இருக்கலாம்

காப்பாற்றி இருக்கலாம்

சுருக்கமாக, தொடக்கத்திலிருந்தே, இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையால் வழங்கப்பட்ட சிகிச்சையைப் பற்றி ஆணையத்திற்கு மிகுந்த சந்தேகம் உள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. ESC வழிகாட்டுதல்களின்படி ஒரு நோயாளிக்கு 10 மி.மீ.-க்கு மேல் வெஜிடேசன் இருப்பது கண்டறியப்பட்டால், அது குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்து மூலம் கரைக்கப்படாவிட்டால் அதற்கு அறுவை சிகிச்சையே மாற்று தீர்வாகும். அத்தகைய நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் அறுவை சிகிச்சை நிபுணரே குழுவின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

 என்ன சொல்கிறது?

என்ன சொல்கிறது?

மேற்படி சாட்சியங்களிலிருந்து, வெஜிடேசன் 14 மி.மீக்கு மேல் உள்ளது என்பது தெளிவாக உள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கும் மேலாக மருத்துகள் அளிக்கப்பட்ட போதிலும், அது குணமாகவில்லை என்றும், நுரையீரலில் திரவ சேகரிப்பு அப்படியே இருந்தது என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மருத்துவ நெறிமுறைகளின்படி அப்போலோ மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்து வெஜிடேசனை அகற்றி, நிலையான பெர்ஃபொரேசனை மூடியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் இதை செய்யவில்லை. இதை செய்து இருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று இந்த ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+