ஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டள்ளது. ஆறுமுகசாமி ஆணையததின் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் 5வது முறையாக அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். அவர் அதிமுகவில் இணைந்த பின்னர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் தனி உதவியாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், போயஸ்கார்டன் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையும் நடத்தியது.
இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கைவிடுத்தது இந்த கோரிக்கை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து உயர்நிதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை மனுதாக்கல் செய்தது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றததில் அப்போலோ மருத்துவமனை மனுதாக்கல் செய்ததது. அப்போலோவின் மனுவை ஏற்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்தது.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மேலும் 4 மாதங்களுக்கு ஆணையம் விசாரிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2017ம் ஆண்டு முதல் நீட்டிக்கப்பட்டு வரும் விசாரணை ஆணையத்துக்கான காவ அவகாசம் 5வது முறையாக இப்போதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications