’விஸ்வரூபம்’ வெளியாக ஜெயலலிதா உதவி.. இல்லையென்றால் படமே வெளியாகியிருக்காது.. எஸ்.பி.வேலுமணி விளக்கம்
ஜெயலலிதா உதவவில்லையென்றால் விஸ்வரூபம் படம் வெளியாகி இருக்காது என்று எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை: கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் ஜெயலலிதா உதவவில்லை என்றால் வெளியாகி இருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதேபோல், திமுக கூட்டணியில் இருப்பதால் கமல்ஹாசன் அவதூறாகப் பேசுவதாகவும் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார்.

கமல்ஹாசன் பேச்சு
ஈரோட்டில் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது பேசுகையில், சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. இன்று விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை. இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்கும் லாபத்திற்கும் இல்லை.

விஸ்வரூபம் விவகாரம்
விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டும் என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். இப்போது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என்றார் ஸ்டாலின் என்று பேசியது விவாதத்தை ஏற்படுத்தியது.

எஸ்.பி. வேலுமணி விளக்கம்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். அதில், விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படம் வெளியாக ஜெயலலிதா உதவினார். ஜெயலலிதா உதவவில்லை என்றால் விஸ்வரூபம் படமே வெளியாகி இருக்காது. திமுக கூட்டணியில் இருப்பதால் கமல்ஹாசன் அவதூறாகப் பேசுகிறார் என்று கூறினார்.

திமுகவுக்கு அடிமை
தொடர்ந்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணி மட்டுமே வைத்துள்ளது. அதிமுகவின் கொள்கைகள் வேறு. பாஜகவின் கொள்கைகள் வேறு. பாஜகவுக்கு ஒருபோதும் அதிமுக பயப்படவில்லை. பாஜகவுக்கு பயப்படுவது திமுக தான். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அக்கட்சிக்கு அடிமையாக உள்ளன. அந்த வரிசையில் கமல்ஹாசனும் இணைந்துள்ளார் என்று விமர்சித்தார்.
-
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications