ஜெயலலிதா வானத்திலிருந்து அதிமுகவை பார்க்கிறார்.. அந்த பயம் எங்களுக்கு உள்ளது.. ஓபிஎஸ் உருக்கம்!
ஜெயலலிதா, வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார், அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசி உள்ளார்.
சென்னை: ஜெயலலிதா, வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார், அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி உள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலும் 18 தொகுதி சட்டசபை தேர்தலும் முடிந்துள்ளது. இன்னும் 4 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் தற்போது தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் மீண்டும் களைகட்டி இருக்கிறது. சட்டசபை இடைத் தேர்தலுக்காக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

அதிமுக தொண்டன்
பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன்.

திமுக ஆட்சி
திமுக, ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவு காண்கிறது. திமுக இந்த லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் இரண்டிலும் படுதோல்வி அடையும். மொத்தமாக ஸ்டாலினின் ஆட்சியை பிடிக்கும் கனவு காணாமல் போகும் அளவிற்கு மக்கள் பாடம் புகற்றுவார்கள்.

அதிமுக எப்படி
அதிமுக கட்சி சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா, வானத்தில் இருந்து அதிமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

பயம் போதும்
அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது. நாங்கள் அந்த பயத்தில்தான் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம். அவரின் வழியில்தான் அதிமுக ஆட்சி சென்று கொண்டு இருக்கிறது. எப்போதும் அவர் வழி காட்டிய திசையில் நாங்கள் பயணிப்போம், என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications