ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளியாகுமா?.. ஆறுமுகசாமி ஆணையம் ஆக.27ல் விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீட்டிப்பு நாளையுடன் முடிவடையும் நிலையில், அதன் விசாரணை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் ஆகஸ்ட் 27ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முறையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மூளை மற்றும் இதயம் செயலிழந்து ஜெயலலிதா உயிரிழ்ந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஓ.பன்னீர்செல்வம்
அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது. ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ஆம் முதல் விசாரணையைத் தொடங்கியது.

ஓபிஎஸ் பல்டி
போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர். ஜெயலலிதா உடன் இருந்த சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி பல்டி அடித்தார். பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவக்குழு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவுகின்ற வகையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவின்படி ஆறு பேர் கொண்ட மருத்துவ குழுவை நியமித்திருந்தது எய்ம்ஸ்.

எய்ம்ஸ் குழு அறிக்கை
அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆணையத்தில் அளிக்கப்பட வாக்குமூலங்களில் ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் தங்களின் அறிக்கையை இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர்.

செப்டம்பர் 22ல் நடந்தது என்ன?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 5 நாட்கள் முன்பாகவே காய்ச்சல் மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில், 22 செப்டம்பர் 2016 இரவு 10 மணிக்கு அவரது உடல்நிலை மோசமானது. அப்போது மூளையின் செயல்திறன் குறைந்து ஆக்சிஜன் அளவு 48%, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 88 என்ற அளவிலும், ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவிலும், ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாகவும் இருந்துள்ளது.

டிசம்பர் 5ல் மரணம்
பாக்டீரியா பாதிப்பால் அவரது சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. டிசம்பர் 4ஆம் தேதியன்று அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய நாளிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சி.பி.அர் சிகிச்சையை தொடர்ந்து 24 மணி நேரம் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு, மூளை மற்றும் இதயம் செயலிழந்து அவர் உயிரிழந்தார்.

14 முறை அவகாசம்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எய்ம்ஸ் மருத்துவக் குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்ததால், ஆணையத்துக்கான அவகாசத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு, அரசும் 14-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

விசாரணை அறிக்கை தாக்கல்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் சுமார் 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்ய உள்ளது. ஆணையம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளில் 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த அறிக்கை இன்று தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications