மூளைச்சாவு அடைந்த ஜெயலலிதா.. இறப்பை மறைத்து அறிவிப்பை தாமதப்படுத்த தந்திர நடவடிக்கை.. பகீர் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பை அறிவிக்க தாமதத்திற்கு காரணமாக சில தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து இன்றைய தினம் சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் பல்வேறு திடுக் தகவல்கள் உள்ளன. அதாவது ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதயத்தின் ரத்த ஓட்டமும் நின்றுவிட்டது. எனவே அவர் பிற்பகல் 3.50 மணிக்கு உயிரிழந்திருக்கலாம்.

 ரத்த ஓட்டம்

ரத்த ஓட்டம்

ஜெயலலிதா உயிரிழந்த பிறகு ரத்த ஓட்டம் இல்லை என தெரிந்த பிறகு அவருக்கு சிபிஆர் சிகிச்சை மிக தாமதமாக 4.20 மணிக்கு வழங்கப்பட்டது. அதுவும் பயிற்சி பெறாத இன்ஸ்ட்ரூமென்ட் கிளீனர்கள் 3 பேரால் இந்த சிகிச்சை வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் வெப்பநிலையை சாதாரண உடல் வெப்பநிலைக்கு கொண்டு வருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் எய்ம்ஸ் மருத்துவக் குழு கேட்டுக் கொண்டனர்.

3 மணி நேரம்

3 மணி நேரம்

இரண்டு அல்லது 3 மணி நேரம் கழித்து பரிசோதித்து இதய செயல்பாடு எதுவும் காணப்படவில்லை என்று கருத்து தெரிவித்தனர். எனவே மறைந்த முதல்வரை எக்மோவிலிருந்து நீக்க அறிவுறுத்தினர். மாற்று அறுவை சிகிச்சை செய்யும் எண்ணமில்லாத போது ஏன் அவரை சாதாரண உடல் வெப்பநிலைக்கு கொண்டுவந்தனர் என்பதை விளக்க முடியவில்லை.

3.50 மணிக்கு இறப்பு

3.50 மணிக்கு இறப்பு

எனவே சாட்சியங்களின் அடிப்படையில் மாலை 3.50 மணிக்கு மறைந்த முதல்வரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. சிபிஆர் , ஸ்டெர்னோடமி மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை அழைத்து முற்றிலும் நேரத்தை போக்குவது மற்றும் வீணானது என்பது தெளிவாகிறது. சிபிஆர் செய்யப்பட்டு 45 நிமிடங்களுக்கு பிறகும் இதயம் செயல்படவில்லை என்றால் அந்த நோயாளி இறந்ததாக அறிவிப்பார்கள். ஆனால் அவருடைய இதயம் மீண்டும் செயல்படாது என்றும் அதை செயல்படுத்த வைக்க முடியாது என்றும் நன்கு அறிந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் நேரத்தை நீட்டித்தனர்.

 யாரை திருப்திப்படுத்த

யாரை திருப்திப்படுத்த

சுயநலம் கருதி மறைந்த முதல்வருக்கு மூளைச் சாவு ஏற்படாதது போல் தங்களை திருப்திப்படுத்துவதற்காக எய்ம்ஸ் குழுவினர் கேஸ் ஷீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது தெளிவாகிறது. ஜெயலலிதாவின் உடலில் மின் முறை மற்றும் ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்ட பிறகும் அவரின் அந்த மாற முடியாத நிலையில் அவரின் உடலில் சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி தொடங்கப்பட்டது பயனற்றவை என்பதுடன் அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கான காரணமாக பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+