தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த பாஜக.. அண்ணாமலையை விட்டுக் கொடுக்காத அமித்ஷா.. இவரா இப்படி புகழ்றாரு!
சென்னை: தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பாதைக்கு செல்லும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராகவும் அவருடைய நிழலாகவும் இருந்த பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அழகாகவும், ஆழமாகவும் வேரூன்றிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மெல்ல மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

கட்சிக்காக உழைத்தவர்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. கட்சியை நம்பி வருபவர்களையும் பாதுகாப்பாய் அரவணைத்துக் கொள்கிறது. கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உயர் பதவி தந்து உழைக்கும் தொண்டர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர வாய்ப்பில்லை என்று பலர் சொல்லிக் கொண்டிருப்பதால் என்னவோ மாற்றுக் கட்சியில் வளர்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடும் என்ற நிலை வரத்தான் போகிறது. அப்படி வரும் போது பலர் அதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்பதே உண்மை. நடக்கும் சூழ்நிலைகள் அதற்கு அச்சாரமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சி, ஆளுமை மிக்க கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பிரதமர்; மறுபக்கம் அமித்ஷா என உலக அரங்கையும், இந்திய அரசியலையும் திகைத்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன அரசியல் சாணக்கியர் நான்தான் என்பதை அமித்ஷா அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
தங்களது கட்சியின் மாநில தலைவர் மீது ஒரு விமர்சனம் வரும்போது அதை தவிடு பொடியாக்கும் விதத்தில் மாற்று கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது மாநில தலைவரையும் உடன் வைத்து ஆளுமையை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார். அதன் மூலம் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் எங்களுக்கு உயர்ந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த செயல் ஒவ்வொரு தொண்டனையும் உற்சாகம் கொள்ளச் செய்திருக்கும்.
தொண்டர்களுக்கான மரியாதையை மாற்றுக் கட்சியினரிடம் உயர்த்தி இருக்கும். தமிழகத்தில் ஒரு நம்பிக்கையான கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தனக்கென ரசிகர் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நான் சொல்வதை என் தலைமை கேட்கும் என்ற நிலை அவருக்கு ரசிகர் கூட்டத்தை மேலும் அதிகப்படுத்தும்..! தொண்டர்களுடைய இதயத்தில் பாதுகாப்பான இயக்கம் என்ற நம்பிக்கையை விதைக்கத் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி படுவேகமாக வளரும் என்றே நான் நினைக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு உங்கள் ஊரில் பாரதிய ஜனதா கட்சி எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? என்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்களே இதற்கு சாட்சி என பூங்குன்றன் கூறியுள்ளார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications