ஜெ. யுனிவர்சிட்டி: திமுக வைத்த செக்.. இல்லாத பல்கலைக்கழகத்திற்காக போராடும் அதிமுக.. என்ன நடந்தது?
சென்னை: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலையுடன் இணைக்கும் சட்ட மசோதா நேற்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அவையில் பாஜக எம்எல்ஏக்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆளும் திமுக கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
Recommended Video
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தததோடு சாலையில் தர்ணா போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். மசோதாவை தாக்கல் செய்ய ஆரம்பிக்கும் போதே அதிமுகவினர் அதை கடுமையாக எதிர்த்தனர்.
பின்னர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைவாணர் அரங்கத்திற்கு முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டம் செய்த அதிமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

காழ்ப்புணர்ச்சி
திமுக காழ்புணர்ச்சியோடு இந்த மசோதாவை கொண்டு வந்து இருப்பதாகவும், ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இயங்குவதை திமுக விரும்பவில்லை என்றும் அதிமுக குற்றஞ்சாட்டி உள்ளது. பெயர் அளவில் மட்டுமே இருக்கும் பல்கலைக்கழகத்திற்காக அதிமுக இந்த போராட்டத்தை நடத்தி உள்ளது.
ஆம் வடிவேலு. இல்லாத கிணத்தை காணோம் என்று கூறி போலீசில் புகார் கொடுப்பாரே.. அந்த காமெடியில் "என்னிடம் ரசீது இருக்கிறது" என்பாரே அப்படித்தான்.. வெறும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட ஆவணங்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்டிடம் எதையும் எழுப்பாமல் அதிமுக போராடி வருகிறது. இந்த இல்லாத பல்கலைக்கழத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம்.

வரலாறு
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்துதான் இந்த ஜெயலலிதா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டது. 2020க்கு முன் 123 கல்லூரிகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகமாக திருவள்ளூர் பல்கலைக்கழகம் வேலூரில் இயங்கி வந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. வேலூரை தலைமையிடமாக கொண்டு எப்போதும் போல திருவள்ளூர் பல்கலைக்கழகம் இயங்கும், அதன் கீழ் வரும் பல்வேறு கல்லூரிகள் தனியாக பிரிக்கப்பட்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தை மையமாக கொண்டு இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

கட்டவில்லை
இந்த அறிவிப்பு சட்டசபையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலம் அக்டோபர் 2020ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான பின் இந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அதிகாரபூர்வமாக தொடங்குவதற்கான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆம் பல்கலைக்கழக அறிவிப்பு வெளியிட்டும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. எந்த செங்கல்லும் இதில் எடுத்து வைக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது.

ஒன்றுமே இல்லை
அதோடு விழுப்புரத்தில் இருந்த பழைய தாலுக்கா அலுவலகம் ஒன்றை பெயிண்ட் அடித்து ஜெயலலிதா பல்கலைக்கழக என்று பெயர் வைத்தனர். இதன் திறப்பு விழாவிற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் கூட செல்லவில்லை. காணொளி மூலம்தான் இவர் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதை தவிர இந்த பல்கலைக்கழகம் தொடர்பாக கட்டுமானம் எதையும் அதிமுக மேற்கொள்ளவில்லை. செயல்படாமல் இருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைதான் தற்போதும் திமுக அரசு அண்ணா பல்கலையுடன் இணைக்கும் முடிவை எடுத்துள்ளது.

இணைப்பு
செயல்படாத நிலையில், ஆவணங்களில் மட்டுமே ஜெயலலிதா பல்கலைக்கழகம் இருந்ததை பயன்படுத்திக்கொண்டு திமுக தலைமையிலான அரசு அதை அண்ணாமலை பல்கலையுடன் இணைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பல்கலைக்கழகம் கட்டப்படவில்லை, முறையாக அனைத்து துறைக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை என்பதை பயன்படுத்தி ஆளும் திமுக அரசு அதிமுக தரப்பிற்கு இந்த செக்கை வைத்து இருக்கிறது. இதற்கான மசோதாவை நேற்று சட்டசபையில் வெற்றிகரமாக திமுக நிறைவேற்றியது.

சிவி சண்முகம் விளக்கம்
அதிமுக ஆட்சியில் இந்த கட்டிடம் கட்டுவதற்காக எந்த பட்ஜெட்டும் ஒதுக்கப்படவில்லை. இதற்காக தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நிதிநிலை மற்றும் நிர்வாக சிக்கல்களை காரணம் காட்டி பல்கலைக்கழகத்தை திமுக இணைந்து உள்ளது. அதிமுக தரப்பை திமுகவின் இந்த முடிவு வெகுவாக சீண்டி உள்ளது. இது தொடர்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தின் போது பேட்டி அளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவிற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக இப்படி செயல்படுகிறது. இந்த பல்கலைக்கு கடந்து பிப்ரவரி மாதம்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

4 மாதம்
நாங்கள் மசோதா கொண்டு வந்து 6 மாதம் கழித்தே ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் இதன் கட்டுமானத்தை தொடங்க முடியவில்லை. அதன்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் இதன் கட்டமான பணிகளை தொடங்க முடியவில்லை. ஆனால் இதற்கு துணை வேந்தரை பிப்ரவரியிலேயே நியமித்திவிட்டோம். ஆனால் இப்போது பல்கலைக்கழகத்தை செயல்பட விடாமல் அண்ணாமலை பல்கலையுடன் இணைந்து உள்ளனர் என்று சிவி சண்முகம் விமர்சனம் வைத்துள்ளார்.

4 வருடம் என்ன?
இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாங்களா தலைவர்களை பெயரை மாற்றுகிறோம், நீங்கள்தான் தலைவர்களின் பெயரில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மாற்றினீர்கள். கலைஞர் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் காப்பீட்டு திட்டம் என்றும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை பசுமை வீடு வழங்கும் திட்டம் என்றும், திமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியது நீங்கள்தான்.. நாங்கள் கிடையாது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் எங்கே இருக்கிறது? அது இப்போது செயல்பாட்டில் உள்ளதா? அதற்கு என்று கட்டிடம் இருக்கிறதா? எங்கே செயல்படுகிறது என்று சொல்லுங்கள். பேருக்காக அறிவித்துவிட்டீர்கள்.. அவ்வளவுதான்.

திமுக வாதம்
இப்போது நிர்வாக வசதி மற்றும் கல்வி வளர்ச்சிக்காக இதை அண்ணாமலை பல்கலையுடன் இணைந்து இருக்கிறோம் என்று பொன்முடி குறிப்பிட்டுள்ளார். அதிமுக இந்த பல்கலை அறிவிப்பை 4 வருடங்களில் எப்போது வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்த அடுத்த வருடமே கூட ஜெயலலிதா நினைவாக இதை அறிவித்து, கட்டுமானங்களை தொடங்கி இருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் அறிவிப்பு வெளியிடாமல் தேர்தல் வருவதற்கு 6 மாதம் முன்பு பல்கலைக்கழக அறிவிப்பை வெளியிட்டது அந்த கட்சிக்கே சிக்கலாக முடிந்துள்ளது.. பல்கலைக்கழகமும் இயங்காமல் மூடப்பட்டுள்ளத.

கட்சியினர் கருத்து
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக நிர்வாகிகள், அம்மா உணவகம் இன்னும் அதே பெயரில்தான் செயல்படுகிறது. பள்ளி புத்தக பைகளில் அதிமுக தலைவர்களில் புகைப்படங்களை திமுக நீக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி இருந்தால் அதை எல்லாம் நீக்கி இருப்பார்கள். ஜெ. பல்கலை செயல்படாத காரணத்தால் அதை இணைந்து உள்ளனர். இதில் காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது என்று வாதம் வைக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புகளோடு அறிவிக்கப்பட்ட இந்த ஜெ. பல்கலை முழுமையாக தொடங்கப்படாமலே முடிவிற்கு வந்துவிட்டது!
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ












Click it and Unblock the Notifications