காலை உணவு திட்டத்தின் பலன் 20 ஆண்டுகளில் தெரியும்.. திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தின் பலன் இன்னும் 20 ஆண்டுகளில் தெரியும் என மாநில அரசின் திட்டக்குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் முக்கியமானதாக பெண்களுக்கான இலவச பேருந்து, மகளிர் உரிமைத்தொகை ஆகிய திட்டங்கள் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இந்த வரிசையில், மிகவும் கவினக்கத்தக்க திட்டமாக இருப்பதாக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம்தான். இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்த திட்டம் குறித்து பேசிய திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், "காலை உணவு திட்டத்தின் பலன் இன்னும் 20 ஆண்டுகளில் தெரியும்" என்று கூறியுள்ளார்.

Jayaranjan said that the benefit of the breakfast program implemented in Tamilnadu will be seen in 20 years

தொடர்ந்து அவர் பேசியதாவது, "மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 1.06 கோடி மகளிருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் உற்று நோக்கி வருகிறார்கள். இந்தியாவின் பிரபல ஊடகங்கள் அனைத்தும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதையடுத்து தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் சூழல் குறித்து தேசிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து இருந்தன. தமிழ்நாட்டில் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், ஏன் இப்படி வழங்குகிறார்கள் என்றும் ஊடகங்கள் விமர்சித்திருந்தன. ஆனால் அவர்களுக்கான பதிலாக நாம் ஒன்றை கொடுத்திருக்கிறோம். அதாவது, தேசிய அளவில் மகாராஷ்டிரா பொருளாதாரத்தில் முதன்மையான மாநிலமாக இருக்கிறது. தற்போது தமிழ்நாடு தேசிய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக வளர்ந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் இது போன்ற நலத்திட்டங்கள் எதுவும் பெரிதாக செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நலத்திட்டங்களை செயல்படுத்தியும் நாம் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம். இதற்கு காரணம் கடந்த 50 ஆண்டுகளில் மாநில அரசு இட்ட அடித்தளத்தின் விளைவுதான் தமிழ்நாடு இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல இப்பொழுது நமது அரசு அமல்படுத்திக் கொண்டிருக்க கூடிய திட்டங்களின் சாதனைகள் 20 ஆண்டுகள் கழித்து நமக்கு பழனி கொடுக்கும்.

நாம் கல்வியை ஊக்குவிக்கிறோம். கல்வி இரு பாலின தவறையும் வேலையை நோக்கி நகர்த்துகிறது குடும்ப வருமானம் நாட்டின் வருமானமாக பெருகுகிறது. இப்படியாக வளர்ச்சி ஏற்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை திட்டத்தைப் போலவே மிகவும் புரட்சிகரமான திட்டம் என்பது காலை உணவு திட்டமாகும். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருந்தது. காரணம் இதில் இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்கள்தான். மதிய உணவு எனில் சமைப்பதற்கு போதுமான நேரம் இருக்கும் சமைத்து கொடுத்து விடலாம் ஆனால் காலை உணவு என்பது சமைப்பதற்கு போதுமான நேரம் இல்லாத சூழலாகும் எனவே காலை உணவு திட்டத்தை அமல்படுத்துவதில் பெருத்த சந்தேகம் எழுந்திருந்தது.

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் காலை உணவு திட்டத்திற்கு 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' எனும் அமைப்பை அணுகினர். அவர்களுக்கு அரசு நிலமும் கொடுத்து நிதியும் கொடுத்து காலை உணவை சமைக்க சொல்லி இருந்தார்கள். எந்தெந்த மாநிலங்களில் உணவு வழங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகள் திட்டம் இல்லாமல் இருக்கிறதோ அந்த மாநிலங்களில்தான் இதுபோன்ற ஆட்களை அழைத்து வந்து உணவு கொடுக்க சொல்வார்கள்.

அதேபோல இதில் வேறு சில சிக்கல்களும் இருந்தன. அதாவது இந்த 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' அமைப்பினர் பூண்டு வெங்காயத்தை தங்களது உணவில் சேர்க்க மாட்டேன் என்று கூறியிருந்தார்கள். அதேபோல முட்டையையும் போட மாட்டேன் என்று சொல்லி இருந்தார்கள். இப்படி இருக்கையில் காலை உணவு திட்டத்தை அரசே கையில் எடுத்து செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது அதன்படி முதற்கட்டமாக பரிச்சாத்த முறையில் 1,530 பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தி பார்க்கப்பட்டது.

இந்த திட்டம் எந்த அளவுக்கு பயன் கொடுத்திருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். நாங்கள் ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் இதில் தெரிய வந்தன. அதாவது காலை உணவு வழங்கப்பட்ட பள்ளிகளில் வருகைப்பதிவு என்பது ஏறத்தாழ 100 சதவீதமாக இருந்தது மற்ற பள்ளிகளில் 75, 70% ஆக இருந்த நிலையில் இந்த பள்ளியில் மட்டும் வருகை பதிவேடு முழுமையாக இருந்தது. அந்த வகையில் இந்த திட்டத்தின் பலன் இன்னும் இருபது ஆண்டுகளில் தெரியும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+