ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு! 24 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்
சென்னை: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. ஜேஇஇ மெயின் தேர்வில் 24 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஜேஇஇ 2 ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜேஇஇ - யில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது.

2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மாதம் 22 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 14 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று இருந்தனர்.
இந்த நிலையில், ஜேஇஇ 2 ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஜேஇஇ முதல் நிலை 2 ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இந்த தேர்வில் 24 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களை வைத்து இந்தியாவில் உள்ள 100 அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியும். ஐஐடி கல்வி நிறுவனங்களில் இந்த மதிப்பெண்களை வைத்து சேர முடியாது. தேர்வு முடிவினை jeemain.nta.nic.in. என்ற இந்த லிங்கில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications